News September 23, 2024
எதிரியாக இருந்தாலும் உதவிய ரிஷப் பண்ட் 
!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா அதிரிபுதிரி வெற்றியை பெற்றது. இந்த ஆட்டத்தின் 2-வது இன்னிங்ஸின் போது, ஒரு திசையில் எந்த பீல்டரும் இல்லாததை கண்ட ரிஷப் பண்ட், அதை வங்கதேச கேப்டன் சாண்டோவுக்கு சுட்டிக்காட்டினார். இதை ஏற்ற சாண்டோவும், அங்கு பீல்டரை நிறுத்தினார். “எதிரி யாராக இருந்தாலும் நமது முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும் என அஜய் ஜடேஜா கூறுவார். அதைதான் நானும் செய்தேன்” என்றார்.
Similar News
News August 13, 2025
அதிமுகவில் இருந்து மைத்ரேயன் நீக்கம்

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் <<17389413>>மைத்ரேயன் <<>>நீக்கப்படுவதாக EPS அறிவித்துள்ளார். அதிமுக கொள்கை – குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் நீக்கப்படுவதாக அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவினர் யாரும் மைத்ரேயனுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
News August 13, 2025
வாக்கு திருட்டு விவகாரம்: திமுக ம.செ., கூட்டத்தில் கண்டனம்

வாக்கு திருட்டு விவகாரம், பிஹார் வாக்காளர் பட்டியல் முறைகேடு உள்ளிட்டவைக்கு, திமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையை வெற்றிகரமாக நடத்திய திமுக நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தும், கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறியுள்ளது. CM ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
News August 13, 2025
Way2News விநாடி வினா கேள்வி பதில்கள்

கேள்விகள்:
1. இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு அமலாக்கப்பட்டது?
2. திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது?
3. EXAM முறையை கண்டுபிடித்தவர் யார்?
4. உடலில் ரத்தம் பாயாத பகுதி எது?
5. தாவரங்கள் காற்றிலிருந்து எந்த வாயுவை உறிஞ்சுகின்றன?
பதில்கள் மதியம் 12:30 மணிக்கு Way2news App-ல் வெளியிடப்படும்.