News May 11, 2024
மோடி ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் எழுச்சி

காங்., ஆட்சி காலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதாக நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார். முந்தைய ஆட்சியாளர்கள் ஏற்படுத்திய நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கைகள் பலனளித்ததாகக் கூறிய அவர், மோடி ஆட்சியின் கீழ் பொதுத்துறை நிறுவனங்கள் வளர்ச்சி பெற்றதாகவும் கூறியுள்ளார். அதற்கு உதாரணமாக ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News September 21, 2025
அனைத்து ரேஷன் கார்டுக்கும் ₹5,000.. தமிழக அரசு தகவல்

தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி குறைப்பை அமல்படுத்துவதாக சுதந்திர தின உரையில் மோடி அறிவித்தார். இந்நிலையில், நாடு முழுவதும் நாளை புதிய ஜிஎஸ்டி அமலுக்கு வருகிறது. இந்நிலையில், அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசாக ₹5,000 வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுபற்றிய அறிவிப்பை தீபாவளியையொட்டி CM ஸ்டாலின் அறிவிப்பார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News September 21, 2025
இந்தியா பவுலிங்.. பும்ரா, வருண் உள்ளே

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான மோதலில், டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. ஓமனுக்கு எதிரான போட்டியில் ஓய்வில் இருந்த பும்ரா, வருண் சக்கரவர்த்தி அணிக்கு திரும்பியுள்ளனர். ஏற்கெனவே, லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. Head to Head = 14, வெற்றி = 11 இந்தியா, 3 பாகிஸ்தான்.
News September 21, 2025
வீட்டில் எல்லோரும் ஒரே சோப்பை யூஸ் பண்றீங்களா?

வீடுகளில் அனைவரும் ஒரே சோப்பை பயன்படுத்துவது பொதுவானதாக என்றாலும், அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்திய பல் ஆராய்ச்சி இதழின்படி, குளிக்கப் பயன்படுத்தப்படும் சோப்புகளில் பல பாக்டீரியா & வைரஸ்கள் இருக்கிறதாம். இவை, சருமத்தில் ஏற்படும் விரிசல்கள் வழியாக உடலில் நுழைவதால், Cross Infection ஏற்படலாம் என எச்சரிக்கின்றனர். எனவே, எல்லோரும் தனித்தனி சோப் யூஸ் பண்ணுங்க!