News October 24, 2025
கலவர வழக்கு: அமைச்சர் சிவசங்கர் விடுதலை

2015-ல் கல்குவாரி உரிமை தொடர்பாக அப்போதைய குன்னம் தொகுதி MLA-வும், இப்போதைய அமைச்சருமான சிவசங்கர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலவரம் ஏற்பட்டு காவல்துறை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக சிவசங்கர் உள்பட 31 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி, சிவசங்கர உட்பட 27 பேரை(4 பேர் இறந்துவிட்டனர்) சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்யப்பட்டனர்.
Similar News
News October 24, 2025
அதிகாரிகளுக்கு CM ஸ்டாலின் உத்தரவு!

சென்னை சீனிவாசபுரம் அருகே அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை CM ஸ்டாலின் ஆய்வு செய்தார். ஆய்வின் போது அமைச்சர் மா.சுப்பிரமணியனும் உடன் இருந்த நிலையில், அதிகாரிகளிடம் பணிகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
News October 24, 2025
இன்று உலக போலியோ தினம்!

கொடிய நோயான போலியோவுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த அக்டோபர் 24-ம் தேதி ‘உலக போலியோ தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. வரும் முன் காப்போம் என்பதற்கு இணங்க 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பது மிகவும் அவசியமானதாகும். ‘Every Child, Every Vaccine, Everywhere, is a call to ensure that no child, in any setting, is left unprotected’ என்பதே இந்த ஆண்டின் கருப்பொருள்.
News October 24, 2025
இஸ்ரேலுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

இஸ்ரேல் – ஹமாஸ் போரில், டிரம்ப் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில், பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான மேற்கு கரையை, இஸ்ரேல் சட்டப்பூர்வமாக இணைக்க முயன்றால், அமெரிக்காவின் ஆதரவை இழக்க நேரிடும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். அரபு நாடுகளுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளதால், இஸ்ரேலின் இந்த முயற்சி ஒருபோதும் நிறைவேறாது என குறிப்பிட்டுள்ளார்.


