News February 17, 2025
ரியோ ராஜின் ‘ஆண் பாவம் பொல்லாதது’ போஸ்டர்

ரியோ ராஜ் நடித்துள்ள புதிய படத்திற்கு ‘ஆண் பாவம் பொல்லாதது’ என தலைப்பிடப்பட்டுள்ளது. VJவாக இருந்த ரியோ பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். ‘ஜோ’ திரைப்படம் அவருக்கு சினிமா துறையில் அவருக்கான இடத்தைத் தேடித் தந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் APP படத்தில் நடித்துள்ளார். இந்தக்கால இளசுகளை கவரும் வகையில், காதல் திரைக்கதை பின்னணியில் படம் உருவாகியுள்ளது.
Similar News
News November 7, 2025
பாக். தளபதிக்கு அதிக அதிகாரம்

பாகிஸ்தானை ஆள்வது PM ஷெபாஸ் ஷெரீப் அல்ல, ராணுவ தளபதி அசிம் முனீர் தான் என்று எதிர்கட்சித் தலைவர் இம்ரான்கான் நேற்று குற்றம்சாட்டினார். இதை உறுதிப்படுத்தும் விதமாக தளபதி முனீருக்கு அதிக அதிகாரம் தரும் வகையில் அந்நாட்டு அரசியலமைப்பில் திருத்தம் செய்ய ஆளுங்கட்சித் தயாராகி வருகிறது. ஏற்கெனவே அரசியலில் ராணுவ தலையீடு அதிகமாக உள்ள நிலையில், இந்த திருத்தத்தால் ராணுவத்தின் கை மேலும் ஓங்கும்.
News November 7, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க..
News November 7, 2025
ரூட்டை மாற்றும் ரிலையன்ஸ்

கச்சா எண்ணெயை சுத்திகரித்து பெட்ரோல், டீசலாக விற்று வந்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், தற்போது கச்சா எண்ணையையே விற்கத் தொடங்கியுள்ளது. மத்திய கிழக்கில் உள்ள தனது கச்சா எண்ணெய் சரக்கை கிரீஸ், இந்திய நிறுவனங்களுக்கு விற்றுள்ளது. ரஷ்ய எண்ணெய் மீது அமெரிக்கா விதித்துள்ள தடையில் இருந்து தப்பிக்க அல்லது புதிய பிசினஸ் உத்தியாக ரிலையன்ஸ் இந்த உத்தியை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.


