News May 15, 2024

யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் நடிக்கும் ரியோ

image

அறிமுக இயக்குநர் ஸ்வினீத் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிகர் ரியோ ராஜ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக, ‘ஜோ’ படத்தில் நடித்த மாளவிகா மனோஜ் மற்றும் அயோத்தி படத்தில் நடித்த ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோர் நடிக்க உள்ளனர். இந்தப் படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

Similar News

News December 26, 2025

பிப்ரவரி 21-ல் வேட்பாளர்கள் அறிவிப்பு

image

திருச்சியில் வரும் பிப்ரவரி 21-ம் தேதி மாநாடு நடத்த உள்ளதாக சீமான் அறிவித்துள்ளார். அந்த மாநாட்டின் போது, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம், 2026 தேர்தலிலும் தனித்து போட்டியிடப் போவதை அவர் உறுதி செய்துள்ளார். மேலும், எத்தனை பேர் பேரம் பேசியும் விலை போகாதவன் நான் என்றும் அவர் கூறியுள்ளார்.

News December 26, 2025

வார்னரின் சாதனையை சமன் செய்த ரோஹித்

image

சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் ஹசாரே டிராபியில் விளையாடிய ரோஹித் சர்மா, முதல் போட்டியிலேயே சதம் விளாசி அசத்தினார். 155 ரன்கள் குவித்த ரோஹித், லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் அதிக முறை 150+ ரன்கள் எடுத்த வீரர் என்ற டேவிட் வார்னரின்(9) சாதனையை சமன் செய்தார். மேலும், அனுஸ்டுப் மஜும்தாருக்கு(39) பிறகு, விஜய் ஹசாரேவில் சதமடித்த அதிக வயதான வீரர் என்ற பெருமையை ரோஹித் (38 ஆண்டு 238 நாள்) பெற்றார்.

News December 26, 2025

ராசி பலன்கள் (26.12.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!