News April 10, 2024
கவர்ச்சி போஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கிய ரிஹானா!

கன்னியாஸ்திரி ஆடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து பாடகி ரிஹானா சர்ச்சையில் சிக்கியுள்ளார். ‘இண்டர்வியூ’ இதழின் முகப்பு பக்கத்தில் இடம்பெற்ற ரிஹானாவின் புகைப்படம் கிறிஸ்தவ மதத்தை புண்படுத்துவது போல இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். அதே போல, தனது அந்தரங்கப் பகுதிகளை கைகளால் மறைத்து ரிஹானா போஸ் கொடுத்த புகைப்படமும் சர்ச்சையாகியுள்ளது.
Similar News
News November 12, 2025
டிச.17-ல் பாமக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம்

வன்னியர்களுக்கு 15% இடஒதுக்கீடு கோரி டிசம்பர் 17-ம் தேதி பாமக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என அன்புமணி அறிவித்துள்ளார். இந்த போராட்டத்தில் லட்சக்கணக்கான பாமகவினர் கைதாக வேண்டும் என்றும் அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தற்போது வரை பாமகவிற்கும், ராமதாஸுக்கும் உண்மையாக உழைத்து வருவதாகவும் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
News November 12, 2025
IPPB-ல் 309 பணியிடங்கள்.. Apply பண்ணுங்க

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 309 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் அசோசியேட், அசிஸ்டண்ட் மேனேஜர் ஆகிய பதவிகளுக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களில் 3 ஆண்டு பணி அனுபவம் தேவை. இதற்கு, வரும் டிச.1-ம் தேதிக்குள் https://ippbonline.bank.in/ தளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 12, 2025
1 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு பசும்பால் கொடுக்கலாமா?

1 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்கக் கூடாது. பசும்பாலில் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின் இ, சி, இரும்புச்சத்து, ஒமேகா 3 போன்ற கொழுப்பு அமிலங்கள் போதுமான அளவு இருக்காது. பசும்பாலின் கொழுப்பை செரிக்கும் அளவுக்கு குழந்தைகளின் செரிமான அமைப்பு இல்லை. எனவே முடிந்தவரை இதனை தவிருங்கள் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அனைவருக்கு இதை பகிருங்கள்.


