News April 7, 2025
ஒரே நாளில் ₹85,854 கோடியை இழந்த பணக்காரர்கள்

இன்று உலகளவில் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்ததால், இந்தியாவின் 4 பெரும் பணக்காரர்கள் ₹85,854 கோடியை இழந்துள்ளனர். அதிகபட்சமாக அம்பானி ₹30,906 கோடியை இழந்துள்ளார். இந்த பட்டியலில் 2ஆம் இடத்தில் உள்ள அதானி ₹25,757 கோடியை இழந்துள்ளார். OP Jindal குழுமத்தின் சாவித்ரி ஜிண்டால் மற்றும் குடும்பத்தினர் ₹18,888 கோடியையும், HCL Technologies நிறுவனர் ஷிவ் நாடார், ₹12,878 கோடியையும் இழந்துள்ளனர்.
Similar News
News August 19, 2025
மயில்சாமி அண்ணாதுரையை வைத்து தேர்தல் கணக்கு?

து.ஜனாதிபதி வேட்பாளராக மயில்சாமி அண்ணாதுரையை INDIA கூட்டணி அறிவித்தால் அது தேர்தல் நோக்கம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். NDA கூட்டணி தமிழர் ஒருவரை வேட்பாளராக அறிவித்த பிறகு, INDIA கூட்டணியும் தமிழரை அறிவித்தால் அது போட்டியாகவே இருக்கும் என்றார். மேலும், துணை ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்புக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கும் தொடர்பு இல்லை என அவர் மறுத்துள்ளார்.
News August 19, 2025
சிவாஜிக்கு பிறகு வடிவேலு தான் சிறந்த நடிகர்: வெற்றிமாறன்

தமிழ் சினிமாவில் சிவாஜிக்கு பிறகு மிகப்பெரிய ஒரிஜினல் நடிகன் என்றால் அது வடிவேலு தான் என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். வடிவேலுவுக்கு படிப்பும், சினிமா பின்புலமும் கிடையாது, ஆனால் ஒவ்வொரு படத்திலும் கேரக்டராகவே வாழ்வார் என அவர் கூறியுள்ளார். மேலும், வடிவேலு வெறும் காமெடி நடிகர் கிடையாது, கதாபாத்திரமாகவே மாறக்கூடியவர் என்றும் தெரிவித்துள்ளார்.
News August 19, 2025
அதிமுக பொ.செயலாளர் வழக்கு.. HC உத்தரவு

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வானதை எதிர்த்த வழக்கை நிராகரிக்க கோரி EPS மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை சென்னை உரிமையியல் கோர்ட்டின் நீதிபதி தள்ளுபடி செய்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து EPS சென்னை HC-ல் மனுதாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, விசாரணையை செப்.3ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.