News June 19, 2024
வெளிநாடுகளுக்கு குடிபெயரும் இந்திய பணக்காரர்கள்

இந்தியாவை சேர்ந்த கோடீஸ்வரர்கள், UAE உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வதாக சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. ஹென்லி & பார்ட்னர்ஸின் ஆய்வு அறிக்கையின்படி, கடந்த ஆண்டு 5,100 கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இந்த ஆண்டு சுமார் 4,300 கோடீஸ்வரர்கள் குடிபெயர்வார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், பல புதிய பணக்காரர்கள் இந்தியாவில் உருவாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 14, 2025
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சூப்

உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை வலுப்படுத்த லைப்ஸ்டைல் கோச் லூக் குட்டினோ அளிக்கும் சூப் ரெசிபி: தேவையான பொருள்கள் : சர்க்கரை வள்ளி கிழங்கு-1, பூண்டு -1, ஸ்பிரிங் ஆனியன்-கொஞ்சம், பார்ஸ்லி, ரோஸ்மெரி -சிறிதளவு. அனைத்தையும் ஒன்றாக சேர்த்து சூப் தயாரிக்கவும். இது நோய் எதிர்ப்பு ஆற்றலை வலுப்படுத்தி சளி, ஃப்ளூ, வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும். ட்ரை பண்ணலாமே!
News September 14, 2025
பள்ளிகளுக்கு 9 நாள்கள் விடுமுறை

+1, +2 மாணவர்களுக்கு செப்.10 முதல் காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு நாளை முதல் 25-ம் தேதி வரையிலும், 9, 10-ம் வகுப்பு நாளை முதல் 26-ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதனையடுத்து, செப்.27 – அக்.5 வரை 9 நாள்கள் தொடர் விடுமுறையாகும். இதனையொட்டி, ஊர்களுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. பயணத்தை சரியாக திட்டமிடுங்கள் நண்பர்களே! SHARE IT.
News September 14, 2025
வடிவேலுவை விட விஜய்க்கு கூட்டம் குறைவு: ரகுபதி

திருச்சியில் நடந்த விஜய்யின் சுற்றுப்பயணத்தின் போது பொது சொத்துக்கள் சேதமடைந்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பாக பேசிய அமைச்சர் ரகுபதி, சட்டம் தன் கடமையை செய்யும் என்று தெரிவித்துள்ளார். பள்ளி, கல்லூரி மாணவர்கள் வசதிக்காக வார விடுமுறையில் மட்டுமே விஜய் பிரசாரம் செய்கிறார் எனக் கூறிய அவர், 2011ல் திமுகவை ஆதரித்து வடிவேலு பிரசாரம் செய்யும்போது, விஜய்க்கு வந்ததை விட அதிக கூட்டம் வந்ததாகவும் தெரிவித்தார்.