News April 10, 2024

அரிசி விலை ₹200 குறைந்தது

image

புழுங்கல் அரிசி விலை கிலோவுக்கு ₹8 வரை (25Kg – ₹200) குறைந்துள்ளது இல்லத்தரசிகளை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. பருவமழை பொய்த்ததால் சில மாதங்களாக அரிசி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. இந்த நிலையில், தற்போது அறுவடை முடிந்து நெல் மூட்டைகள் வரத்து அதிகரித்துள்ளதால் விலை கணிசமாக குறைந்துள்ளது. வரும் நாட்களில் அனைத்து ரக அரிசிகளின் விலையும் குறையும் என்பதால் பெண்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Similar News

News November 12, 2025

சந்தேக வளையத்திற்குள் Al-Falah பல்கலைக்கழகம்!

image

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில், ஹரியானாவின் Al-Falah பல்கலை. சந்தேக வளையத்திற்குள் சிக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஷாஹீன் சயீத், முஸம்மில் ஷகீல் உள்ளிட்ட பல டாக்டர்கள் Al-Falah பல்கலை.-யில் பணியாற்றியுள்ளனர். தீவிரவாத நடவடிக்கைகளில் பணி நீக்கம் செய்யப்பட்ட டாக்டர் <<18268646>>நிசார்-உல்-ஹசன்<<>> எப்படி பல்கலை.-யில் பணி நியமனம் செய்யப்பட்டார் என்பதும் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.

News November 12, 2025

சென்னை – விஜயவாடா வந்தே பாரத் நரசபூர் வரை நீட்டிப்பு

image

சென்னை – விஜயவாடா இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் இன்று முதல் நரசபூர் வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. காலை 5:30 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் இந்த ரயில்(20677), ரேணிகுண்டா, ஓங்கோல், விஜயவாடா வழியாக பிற்பகல் 2:10 மணிக்கு நரசபூர் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் 2:30 மணிக்கு புறப்படும் இந்த ரயில்(20678) இரவு 11:45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடைகிறது.

News November 12, 2025

ரிலையன்ஸுடன் இணைந்த நடிகர் அஜித்குமார்

image

அஜித்குமாரின் ரேஸிங் அணி, ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கைக்கோர்த்துள்ளது. ரிலையன்ஸின் எனர்ஜி ட்ரிங்க் பிராண்டான CAMPA எனர்ஜி, AK ரேஸிங் அணியின் அதிகாரப்பூர்வ எனர்ஜி பார்ட்னராக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் ஸ்போர்ட்ஸில் இந்தியாவை உலகளவில் கொண்டு செல்லும் தொலைநோக்குடன் செயல்படும் AK ரேஸிங் அணியுடன் பார்ட்னர்ஷிப் வைப்பது மகிழ்ச்சி என்றும் ரிலையன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

error: Content is protected !!