News October 25, 2025
சுஷாந்த் மரணத்தில் ரியாவுக்கு தொடர்பில்லை: CBI

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம், நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. அவரை தற்கொலைக்கு தூண்டியதாக Ex காதலி ரியா சக்ரவர்த்தி மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த வழக்கை விசாரித்து வந்த CBI, ரியா மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஆனால், சரியாக விசாரிக்காத CBI-யின் அறிக்கையை ஏற்க முடியாது என்று சுஷாந்த் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
Similar News
News January 18, 2026
ஓசூர் ஏர்போர்ட் திட்டத்தை நிராகரித்தது மத்திய அரசு

ஓசூரில் ஏர்போர்ட் கட்டுவதற்கான TN அரசின் பரிந்துரையை மத்திய அரசு மீண்டும் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல்(HAL) நிறுவனத்தின் பயிற்சிக்காக பாதுகாப்புத்துறை அனுமதி தர மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சூளகிரி அருகே பேரிகை மற்றும் பாகலூர் இடையே 2,300 ஏக்கர் பரப்பளவில் புதிய ஏர்போர்ட் அமைக்க அறிக்கை தயார் செய்யும் பணியில் அரசு இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
News January 18, 2026
யாருடன் கூட்டணி? மீண்டும் பிரேமலதா ஆலோசனை!

திமுக, அதிமுக, தவெக என 3 வாய்ப்புகள் இருப்பதால் எந்த பக்கம் செல்வது என முடிவெடுக்காமல் பிரேமலதா யோசனையில் உள்ளார். அதனால் தான் கடந்த 9-ம் தேதி கூட்டணி முடிவை வெளியிடாமல் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார். இந்நிலையில், நேற்று MGR-ன் 109-வது பிறந்தநாளையொட்டி தேமுதிக அலுவலகத்தில் MGR சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின்னர், முக்கிய நிர்வாகிகளுடன் மீண்டும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
News January 18, 2026
கேஸ் சிலிண்டர் சீக்கிரமாக காலியாகாமல் இருக்க…

*பர்னர் சுத்தமா இருக்கணும். அழுக்கு இருந்தால், நெருப்பு அதிகமாக தேவைப்படும் *தட்டையான பாத்திரத்தை பயன்படுத்தும் போது, நெருப்பு சமமாக பரவி சீக்கிரமாக சமையல் ஆகும் *அரிசி, பருப்பு, சுண்டல், மொச்சை போன்றவற்றை நீரில் ஊற வைத்து, அடுப்பில் வைத்தால் சீக்கிரமாக வேகும் *பாத்திரத்தை கழுவிய உடனே ஈரத்துடன் அடுப்பில் வைக்க வேண்டாம். அதே போல, fridgeல் இருந்து எடுத்தவுடன் காய்கறிகளை அடுப்பில் போட வேண்டாம்


