News December 31, 2024
REWIND: இந்த ஆண்டு உயிரிழந்த திரை பிரபலங்கள்

2024ஆம் ஆண்டு பல முக்கிய திரைப் பிரபலங்கள் நம்மை விட்டு பிரிந்திருக்கின்றனர். குறிப்பாக, டெல்லி கணேஷ், டேனியல் பாலாஜி, மனோ பாலா, சேஷு, செவ்வாழை ராசு, பிஜிலி ரமேஷ், நேத்ரன், விஸ்வேர ராவ், பிரதீப் விஜயன், அடடே மனோகர் ஆகியோர் இந்தாண்டு உயிரிழந்தனர். இவர்களின் மரணம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
Similar News
News December 5, 2025
திருப்பரங்குன்றம் விவகாரம்: லோக்சபாவில் காரசார வாதம்

லோக்சபாவில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. பாஜக, மதரீதியான கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாக டி.ஆர்.பாலு குற்றஞ்சாட்டினார். நீதிபதி சுவாமிநாதன் குறித்து அவர் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இதற்கு இணையமைச்சர் எல்.முருகன், திமுக மக்களின் வழிபாட்டு உரிமையை மறுப்பதாக விமர்சித்த நிலையில், இதற்கு திமுக MP-க்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.
News December 5, 2025
4 ஆண்டுகளில் 9 மடங்கு வளர்ச்சி: CM ஸ்டாலின்

ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில் ₹1,003 கோடி முதலீட்டில் பாரத் இன்னோவேட்டிவ் கிளாஸ் டெக்னாலஜி ஆலையை CM ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனையடுத்து பேசிய அவர், மின்னணு பொருள்களின் தலைநகரமாக தமிழகம் திகழ்கிறது என பெருமிதம் தெரிவித்தார். மேலும், மின்னணு துறையில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 9 மடங்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
News December 5, 2025
90s கிட்ஸ்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்!

சிறுவயதில் பல கார்ட்டூன்களை பார்த்திருந்தாலும் பவர் ரேஞ்சர்ஸ் தொடருக்கென இன்றளவும் நம் மனதில் தனி இடம் உள்ளது. இந்நிலையில், பவர் ரேஞ்சர்ஸின் புதிய சீசனை உருவாக்குவதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாக அதன் இயக்குநர்கள் தெரிவித்துள்ளனர். இதில் பழைய கிளாசிக் ரேஞ்சர்கள் இடம்பெறுவார்களா என்பது சந்தேகமே. இது இணைய தொடராக ஓடிடி தளத்தில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


