News March 28, 2025
Rewind: பேரழிவு நாளாக மாறுகிறதா மார்ச் 28?

மார்ச் 28-ம் தேதியில் மட்டும் வெவ்வேறு ஆண்டுகளில் 3 மிகப்பெரிய நிலநடுக்கங்களை உலகம் கண்டுள்ளது. துருக்கியில் 1970 மார்ச் 28 அன்று நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்(7.1) பதிவானது. இதில், 1086 பேர் உயிரிழந்தனர். இந்தோனோசியாவின் சுமத்ரா தீவுகளில் 2005 மார்ச் 28-ல் ஏற்பட்ட நிலநடுக்கம் (8.7), 905 பேரின் உயிரைக் குடித்தது. இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மியான்மர் நாட்டை உருக்குலையச் செய்துள்ளது.
Similar News
News March 31, 2025
இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.61.43 லட்சம் கோடி

இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.61.43 லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பரில் இக்கடன் ரூ.55.44 லட்சம் கோடியாக இருந்தது. இது கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சுமார் ரூ.6 லட்சம் கோடி வரை அதிகரித்துள்ளது. இது 10.7% அதிகமாகும். வெளிநாட்டுக் கடன் அதிகரித்ததற்கு என்ன காரணம் என நிதியமைச்சகம் குறிப்பிடவில்லை.
News March 31, 2025
ஊட்டிக்கு வர இ-பாஸ் கட்டாயம்

ஊட்டிக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நீதிமன்ற ஆணைக்கிணங்க ஏற்கெனவே கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், நீலகிரியிலும் ஏப்ரல் 1 முதல் ஜூன் மாதம் வரை இ-பாஸ் நடைமுறை பின்பற்றப்படவுள்ளது. வார நாள்களில் 6000 வாகனங்களும் வார இறுதியில் 8000 வாகனங்களும் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 31, 2025
ஏப்ரலில் வங்கிகளுக்கு 10 நாள்கள் விடுமுறை

ஏப்ரலில் வங்கிகளுக்கு 10 நாள்கள் விடுமுறை. ஏப். 1 வருட கடைசி கணக்கு நிறைவு நாள் என்பதால் விடுமுறை. ஏப்.10 மகாவீர் ஜெயந்தி, ஏப். 14 தமிழ் புத்தாண்டு, ஏப். 18 புனித வெள்ளி ஆகும். இந்த நாட்களிலும், ஏப்ரல் 6, 12, 13, 20, 26, 27 ஆகிய தேதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் வருவதால் அன்றைய நாள்களும் விடுமுறை ஆகும். இந்த 10 நாள்களும் வங்கிகள் திறந்திருக்காது. இதை வைத்து திட்டமிட்டு வங்கி செல்லுங்கள்.