News April 9, 2025
REWIND:அந்த கால வாகனங்கள்.. நினைவிருக்கா?

ஒரு காலத்தில் நமது அடையாளமாக இருந்த சில வாகனங்கள் இன்று கண்காட்சிகளில்தான் காண வேண்டும். கிராமப்புறங்களில் முக்கிய போக்குவரத்து சாதனமாக இருந்த மாட்டு வண்டிகள், இப்போது அரிதாகிவிட்டன. நகரங்களில் பயணிக்க மக்கள் பயன்படுத்திய சைக்கிள் ரிக்ஷாக்களும் மறைந்துவிட்டன. அன்றைய சொகுசு கார் ஸ்டாண்டர்ட் 2000 தான். அதோடு அன்றைய எதிர்பார்ப்புகளை மிஞ்சிய கார் என்றால் அது ஸ்டாண்டர்ட் ஹெரால்ட்.
Similar News
News April 17, 2025
இந்துக்களும் நாமும் ஒன்றல்ல: பாக். ராணுவத் தளபதி

பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர், மத ரீதியான சர்ச்சை கருத்தை பேசியுள்ளார். வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர்கள் மத்தியில் பேசிய அவர், இந்துக்களிடம் இருந்து நாம் வேறுபட்டவர்கள் எனக் குறிப்பிட்டார். நமது மதம், பழக்கவழக்கம், மரபு உள்ளிட்டவை இந்துக்களிடம் இருந்து வேறுபாடானது எனவும், இதனை தங்கள் குழந்தைகளிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் எனவும் அசிம் வலியுறுத்தினார். இதுபற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?
News April 17, 2025
Health Tips: விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகள்

பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் போன்ற பருப்புகளுடன் பேரீச்சை பழத்தை தினமும் சாப்பிட்டால் உடலில் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும் என டாக்டர்கள் கூறுகிறார்கள். வேர்க்கடலையில் இருக்கும் ஜிங்க், விந்தணுக்களின் தரத்தை அதிகரிக்க உதவுகிறதாம். மேலும், வெங்காயம், பூண்டு இரண்டும் ஆண்மை பெருக்கியாகவும், விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகளின் பட்டியலில் முக்கியமானதாகவும் இருக்கிறதாம். SHARE IT.
News April 17, 2025
SBI, BOI வங்கிகளைத் தொடர்ந்து BOM வங்கியும் வட்டி குறைப்பு

SBI, BOI வங்கிகளைத் தொடர்ந்து, <<16115403>>கடன்கள்<<>> மீதான வட்டியை BOM-ம் குறைத்துள்ளது. SBI வங்கி, வீடு, வாகன கடன்கள் மீதான வட்டியை 25 அடிப்படை புள்ளிகள் நேற்று முன்தினம் குறைத்தது. பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர் சீஸ் வங்கி (IOB), இந்தியன் வங்கியும் கடன்கள் மீதான வட்டியை குறைத்தன. இதையடுத்து பேங்க் ஆப் மகாராஷ்டிராவும் (BOM ) தற்போது வட்டியை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது.