News April 23, 2025
REWIND: சங்ரம்போரா படுகொலை தெரியுமா?

பஹல்காமில் முஸ்லிம்கள் அல்ல என உறுதி செய்துவிட்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றது போன்ற சம்பவம் 28 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது. 1997 மார்ச் 21, அன்று புத்காம் மாவட்டத்தில் காஷ்மீரி பண்டிட்கள் அதிகம் வசிக்கும் சங்ரம்போரா கிராமத்திற்குள் புகுந்த பயங்கரவாதிகள், இந்த தாக்குதலை நடத்தினர். 7 இந்துக்களை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகளை கண்டித்து காஷ்மீர் முஸ்லிம்கள் அப்போதும் போராட்டம் நடத்தினர்.
Similar News
News November 22, 2025
மல்லிகை விலை ₹4,000ஆக உயர்ந்தது!

சங்கரன்கோவில் மலர் சந்தையில் நேற்று ₹1,500-க்கு விற்கப்பட்ட மல்லிப்பூ இன்று(நவ.22) கிலோவுக்கு ₹4,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சபரிமலை சீசன் மற்றும் நாளை முகூர்த்த தினம் என்பதால் தோவாளை, ஆண்டிபட்டி, நிலக்கோட்டை, மதுரை, ஓசூர் உள்ளிட்ட மலர் சந்தைகளிலும், மல்லிகை மட்டுமல்லாமல் கனகாம்பரம், சம்பங்கி, முல்லை, அரளிப்பூ, செண்டுமல்லி, செவ்வந்தி உள்ளிட்ட பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
News November 22, 2025
டாக்டர் Fish பற்றி உங்களுக்கு தெரியுமா?

டாக்டர்கள் மட்டுமல்ல, சில சமயங்களில் மீன்கள் கூட நமக்கு சிகிச்சை அளிக்கும். எந்த மீன் என யோசிக்கிறீர்களா? மீன் ஸ்பாக்களுக்கு சென்றால் காலை கடிக்க விடப்படும் Garra rufa மீன்களே அவை. துருக்கியில் வெந்நீரூற்றுகளின் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மீன்களுக்கு பற்கள் கிடையாது. உதடுகள் மூலமே இறந்த செல்கள் மற்றும் ஒட்டுண்ணிகளை உண்ணும். உலகின் பல தோல் நோய்களுக்கு இது மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
News November 22, 2025
தனுஷின் திறமைக்கு ரசிகை: கீர்த்தி சனோன்

தனுஷின் திறமைக்கு நான் ரசிகை என கீர்த்தி சனோன் கூறியுள்ளார். பல படங்களை இயக்கியிருப்பதால் காட்சிகள் எப்படி திரையில் வெளிப்படும் என்ற புரிதல் தனுஷுக்கு இருப்பதாகவும், பல நுணுக்கங்களை அறிந்திருக்கும் தனுஷுடன் நடித்ததில் மகிழ்ச்சி எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், நல்ல சீன்களை நடித்து முடித்த பின் இருவரும் ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.


