News December 26, 2025
REWIND: சுனாமி பேரலை 8,000 தமிழர்களை கொன்ற நாள்!

ஆழிப்பேரலை(Tsunami) கொத்து கொத்தாக மக்களை கொன்று குவித்த துயரத்தின் 21-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழகத்தில் 2004-ம் ஆண்டு இதே நாளில் கடற்கரை ஓரங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாடியவர்கள் உள்பட 7,993 பேர் உயிரிழந்தனர். தாய், தந்தை, மனைவி, அக்கா, தம்பி, பிள்ளைகள் என உறவுகளை இழந்தவர்கள் இன்னும் அந்த துயரிலிருந்து மீளாமல் கடலில் மலர் தூவி, பால் ஊற்றி தங்களது அஞ்சலியை செலுத்தினர்.
Similar News
News January 1, 2026
PM மோடி புத்தாண்டு வாழ்த்து!

நாட்டு மக்கள் அனைவருக்கும் PM மோடி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பான தனது எக்ஸ் பதிவில், 2026-ம் ஆண்டு, அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தையும் செல்வ செழிப்பையும் வழங்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மக்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடைந்து, காரியங்கள் முழுமையடைய வாழ்த்தியுள்ளார். நம் சமுதாயத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
News January 1, 2026
ஹேப்பி நியூ இயர் சொன்ன ‘தல’ தோனி!

ரிட்டயராகி 7 ஆண்டுகள் கடந்த பின்னரும், கிரிக்கெட் என்றால் ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது என்னவோ ‘தல’ தோனி. அவரின் ஒவ்வொரு போட்டோவும் சோஷியல் மீடியாவை அதிரவைத்து விடுகிறது. அந்த வகையில் தனது குடும்பத்தினருடன் அவர் நியூ இயர் கொண்டாடிய போட்டோ வைரலாகி வருகிறது. தலையில் தொப்பி வைத்தபடி இருக்கும் தோனியை பார்த்த நெட்டிசன்கள், ‘இது Pookie தல’ என கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
News January 1, 2026
பொங்கல் பரிசு ₹5,000.. போஸ்டர் TRENDING

பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக ₹248 கோடி ஒதுக்கீடு செய்து <<18726279>>TN அரசு அரசாணை<<>> வெளியிட்டுள்ளது. அதில், தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு கொள்முதல் செய்வதற்காக இத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ரொக்கம் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகாததால் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ₹5,000 வழங்க கோரி அதிமுக சார்பில் சென்னையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அவை தற்போது SM-ல் வைரலாகி வருகின்றன.


