News August 9, 2024

ஆக.20 முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம்

image

2025 ஜனவரி 1ஆம் தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை, ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை மேற்கொள்ள, மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலை 2025 ஜனவரி 26ஆம் தேதி வெளியிட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல், அக்டோபர் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Similar News

News September 18, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶செப்டம்பர் 18, புரட்டாசி 2 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: துவாதசி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: தேய்பிறை.

News September 18, 2025

₹3.28 லட்சம் விலை குறைத்த கார் நிறுவனம்

image

GST மறுசீரமைப்பு எதிரொலியாக பல்வேறு கார், பைக் நிறுவனங்கள் தங்களது வாகனங்களின் விலையை குறைத்து வருகின்றன. அந்த வகையில், SKODA கார் நிறுவனம் விலையை குறைத்துள்ளது. அதன்படி, Kodiaq மாடல் ₹3.28 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், Kylaq – ₹1.19, Slavia – ₹63,000, Kushaq – ₹61,000 வரை விலை குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பு வரு 22-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

News September 18, 2025

மாற்று என்றவர்கள் மறைந்து போனார்கள்: MK ஸ்டாலின்

image

திமுகவிற்கு மாற்று என்று இப்போதும் சிலர் பேசிக் கொண்டிருப்பதாக விஜய்யை, ஸ்டாலின் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார். திமுக முப்பெரும் விழாவில் உரையாற்றிய அவர், மாற்றம் மாற்றம் என்று சொன்னவர்கள் மாறி போனதாகவும் மறைந்து போனதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், இன்றும் மாறாத திமுக, தமிழக மக்கள் மனதிலிருந்து மறையவில்லை என்றும் கூறியுள்ளார். நம் கொள்கைதான் நமது பலம் என்ற அவர், இதுவே தமிழ்நாடு Politics என்றார்.

error: Content is protected !!