News September 6, 2025
GST வரியால் வருவாய் இழப்பு: கார்கே வலியுறுத்தல்

GST வரி குறைப்பால் வருவாய் இழப்பு ஏற்படும் மாநிலங்களுக்கு, அந்த இழப்பை மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு ஈடு செய்ய வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். GST 2.0-வை வரவேற்பதாக தெரிவித்த அவர், 8 ஆண்டுகளாக தூக்கத்தில் இருந்த மோடி அரசு, தற்போது விழித்துக்கொண்டு ஜிஎஸ்டியை மறுசீரமைத்துள்ளதாக சாடினார். இதற்காக 10 ஆண்டுகளாக காங்., போராடி வந்ததாகவும் கூறியுள்ளார்.
Similar News
News March 11, 2026
நாடு முழுவதும் லாக்டவுன் பதற்றம்.. அடுத்த ஷாக்!

2020 மார்ச் மாதத்தை நாம் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 25.3.2020 – 14.4.2020 வரை முதற்கட்ட லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. தற்போது சிலிண்டர் பிரச்னை மறைமுகமாக லாக்டவுனை நோக்கி நகர்த்தி வருவதாக இணையத்தில் பலரும் பதிவிட்டு வருவதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர். அதனால், சிலிண்டர் வாங்க பலரும் குவிகின்றனர். ஆனால், பிரச்னை விரைவில் தீரும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
News March 11, 2026
திருச்சி வரும் PM மோடி.. முக்கிய திட்டங்கள் என்னென்ன?

திருச்சியில் இன்று மாலை நடைபெறும் அரசு விழாவில் ₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை PM மோடி தொடங்கி வைக்கிறார். நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் ₹3,680 கோடி முதலீட்டில் BPC நிறுவனத்திற்கு அடிக்கல், சென்னை மணலியில் ₹1,490 கோடியில் IOC மசகு எண்ணெய் கலவை ஆலை திறப்பு உள்ளிட்டவைகள் இதில் அடங்கும். மேலும், கோவை – தன்பாத் இடையே அம்ரித் பாரத் உள்ளிட்ட 5 புதிய ரயில் சேவைகளையும் தொடங்கி வைக்க உள்ளார்.
News March 11, 2026
IPL தொடர் தள்ளிப் போகிறதா?

கேஸ் தட்டுப்பாடு காரணமாக IPL போட்டிகள் திட்டமிட்டபடி வரும் 28-ல் தொடங்குமா என சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலை நீடித்தால், ஹோட்டல்களில் தங்கும் வீரர்களுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். விமான சேவை பாதித்தால் வீரர்கள் பயணம் செய்வது சிரமமாகும். இந்நிலையில், IPL தொடங்குவதற்குள் நிலைமை கட்டுக்குள் வரவில்லை எனில், மாற்று வழிகள் குறித்து ஆலோசிக்கப்படும் என IPL தலைவர் அருண் துமால் கூறியுள்ளார்.


