News May 4, 2024
ரேவண்ணாவை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்

பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த ரேவண்ணா, தந்தை தேவகவுடா இல்லத்தில் பதுங்கி இருந்த போது சிறப்பு புலனாய்வு போலீசார் அவரை கைது செய்துள்ளனர். முன்னாள் பிரதமரின் வீட்டிற்கு போலீசார் வர மாட்டார்கள் என்ற எண்ணத்தில் அவர் அங்கு மறைந்திருந்த நிலையில், போலீசார் தேவகவுடா வீட்டை கண்காணித்து வந்துள்ளனர். ரேவண்ணாவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட சில நிமிடங்களில், வீட்டை சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர்.
Similar News
News August 19, 2025
முதல் ரூபாய் நோட்டை பாத்திருக்கீங்களா?

இந்தியாவில் ரிசர்வ் வங்கி 1935-ல் பிரிட்டிஷ் அரசால் நிறுவப்பட்டது. அதனை தொடர்ந்து, தனது முதல் ரூபாய் நோட்டாக ரிசர்வ் வங்கி 1938-ல் ₹5 மதிப்பிலான நோட்டை அச்சடித்து வெளியிடப்பட்டது. இந்த நோட்டில் அப்போதைய இங்கிலாந்து அரசர் கிங் ஜார்ஜ் VI இடம்பெற்றிருந்தார். அதே வருடத்தில் ₹10, ₹100, ₹1,000, ₹10,000 நோட்டுகளும் அச்சடித்து வெளியிடப்பட்டன. நீங்க பார்த்த பழைய ரூபாய் நோட்டு எது?
News August 19, 2025
இன்பநிதிக்கு ரெட் ஜெயண்ட் CEO பொறுப்பு?

ரெட் ஜெயண்ட் சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் CEO பொறுப்பு உதயநிதி மகன் இன்பநிதிக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தந்தையை போல் சினிமா தயாரிப்பில் கால்பதிக்கும் அவர், லோகேஷ் இயக்கத்தில் ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் புதிய படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அண்மையில், இன்பநிதிக்கு கலைஞர் டிவியில் நிர்வாக பொறுப்பு வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.
News August 19, 2025
அரசியலமைப்பை மதிக்கும் வேட்பாளர்: கனிமொழி

RSS-யை சேர்ந்த ஒருவரை எதிர்க்கும் வகையில், சுதர்சன் ரெட்டியை தேர்வு செய்துள்ளதாக கனிமொழி விளக்கம் அளித்துள்ளார். மேலும், தங்கள் வேட்பாளர் அரசியலமைப்பு சட்டத்தை மதிப்பவர் எனவும் அவர்கள்(NDA) தேர்வு செய்த வேட்பாளர் யார் என உங்களுக்கே தெரியும் என்றார். இது சித்தாந்தங்களுக்கு இடையேயான மோதல் எனவும், TN-யை சேர்ந்தவர் வேட்பாளர் என்பதால் BJP-க்கு நம் மீது அக்கறை உள்ளதென அர்த்தமாகிவிடாது என்றும் கூறினார்.