News April 15, 2025
ரெட்ரோவின் அடுத்த அப்டேட்.. சூர்யா ரசிகர்கள் குஷி

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ரெட்ரோ படத்துக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு உள்ளது. மே 1-ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் காமிக்ஸ் வடிவில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா வருகிற 18-ம் தேதி நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
Similar News
News December 13, 2025
ஒரே குடையில் கொண்டுவர PM மோடி திட்டம்!

நாடு முழுவதும் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் கலைத்துவிட்டு ‘Viksit bharat shiksha adhikshak’என்ற ஆணையத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் UGC, AICTE, NCTE, மருத்துவம், சட்டம் உள்ளிட்ட ஆணையங்களின் செயல்பாடுகள் இனி ஒரே ஆணையமாக செயல்பட உள்ளது. இதற்கான மசோதாவை நடப்பு கூட்டத்தொடரிலேயே அறிமுகம் செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?
News December 13, 2025
திமுகவே வாக்குத்திருட்டில் ஈடுபட்டு வருகிறது: அன்புமணி

<<18547716>>மகளிர் முன்னேற்றம்<<>> பற்றி CM ஸ்டாலின் பேசியிருந்த நிலையில், மதுக்கடைகளை திறந்து குடும்பங்களை தெருவுக்கு கொண்டு வந்துவிட்டு, மகளிர் முன்னேற்றம் எனக்கூறுவது வெட்கக்கேடு என அன்புமணி விமர்சித்துள்ளார். மகளிருக்கு மாதம் ₹1000 வழங்கும் திட்டமே ஒரு வாக்குத்திருட்டு நடவடிக்கை தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக அதிமுக, பாஜகவும் தேர்தலுக்காகவே மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுவதாக கூறியிருந்தன.
News December 13, 2025
ரீ-ரிலீஸில் கில்லியை ஓரங்கட்டிய படையப்பா!

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ள ‘படையப்பா’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் முதல் நாளில் கிட்டத்தட்ட ₹4.5 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம், ரீ-ரிலீஸில் முதல் நாளில் அதிகம் வசூல் படம் என்ற பெருமையையும் ‘படையப்பா’ பெற்றுள்ளது. முன்னதாக, விஜய்யின் ‘கில்லி’ ₹3.1 கோடி வரை வசூலித்திருந்ததே ரெக்கார்டாக இருந்தது.


