News January 8, 2025
மே 1ஆம் தேதி ரிலீஸாகிறது ‘ரெட்ரோ’

சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம், மே 1ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்த படத்தில், பூஜா ஹெக்டே, கருணாகரன், ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். ஆக்ஷன் த்ரில்லர் நிறைந்த காதல் படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Similar News
News January 20, 2026
டைனோசர்களுக்கும் மூத்த நதி எது தெரியுமா?

பூமியின் பழமையான நதி எது தெரியுமா? ஆஸ்திரேலியாவின் பாலைவன பகுதியில் பாயும் Finke நதி! 30 முதல் 40 கோடி ஆண்டுகள், அதாவது டைனோசர்கள் பிறப்பதற்கு முன்பே ஓட தொடங்கி விட்டதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மழைக்காலத்தில் மட்டும் ஆறாக ஓடும்; மற்ற நேரத்தில் குட்டைகளாக காட்சியளிக்கும். மலைகள் உருவாவதற்கு முன்பே இந்த நதி ஓடிக்கொண்டிருந்ததால், மெக்டோனல் மலைத்தொடரை நேர்க்கோட்டில் கிழித்துக் கொண்டு பாய்கிறது.
News January 20, 2026
யார் இந்த நிதின் நபின்?

பாஜகவின் தேசியத் தலைவராக 45 வயதான நிதின் நபின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிஹார் மாநிலத்தை சேர்ந்த நிதின் நபின், பாஜக தலைவராக இருந்த நவீன் கிஷோர் பிரசாத் சின்காவின் மகன். தந்தையின் மறைவுக்கு பிறகு அவர் பிஹாரில் 5 முறை MLA-வாக வெற்றி கண்டார். இளம் வயதிலேயே பாஜக தேசிய தலைவரானவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
News January 20, 2026
ராசி பலன்கள் (20.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


