News October 5, 2025
ஓய்வு பெறும் Ro- Ko?

2027 ODI WC-யை வெல்ல வேண்டும் என்ற Ro- Ko-வின் கனவு நிறைவேறாது போலும். 2027 ODI WC-க்கு இளம் இந்திய அணியை தயார்படுத்த BCCI திட்டமிட்டிருப்பதன் காரணமாகவே ரோஹித்தின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் Age factor-ம் பிரச்னையாக இருப்பதால், 2027 ODI WC-க்கு முன்பாகவே இருவரும் ப்ளூ ஜெர்சியில் இருந்து விடை பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது. இருவரும் 2027 ODI WC-ல் விளையாட வேண்டுமா?
Similar News
News October 5, 2025
Recipe: செட்டிநாட்டு ஸ்பெஷல் கும்மாயம் செய்யலாம் வாங்க!

*வாணலியில் பச்சரிசி, பாசிப் பருப்பு, உளுந்து ஆகியவற்றை நன்றாக வறுத்து, மாவு பதத்தில் அரைத்து தூளாக்கி கொள்ளவும் *கடாயில் 2 தேக்கரண்டி நெய், வடிகட்டிய வெல்லப் பாகு, பால் ஊற்றி கொதிக்க விடவும் *பின் அடுப்பை சிம்மில் வைத்து, மாவு கலவையை சேர்த்து கிளறவும் *வெந்ததும் முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கினால் சுவையான செட்டிநாட்டு கும்மாயம் ரெடி. இதனை நண்பர்களுக்கும் பகிரவும்.
News October 5, 2025
சற்றுமுன்: கார் விபத்தில் சிக்கினார் கல்யாணசுந்தரம்

அதிமுக செய்தித்தொடர்பாளர் கல்யாணசுந்தரம் சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. சென்னையில் இருந்து கோவைக்கு சென்று கொண்டிருந்தபோது, உளுந்தூர்பேட்டை அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் சிறு காயங்களோடு கல்யாணசுந்தரம் உயிர் தப்பியுள்ளார். அவருக்கு ஹாஸ்பிடலில் சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
News October 5, 2025
‘AK 64’ ஸ்பெஷல் அப்டேட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன்

குட் பேட் அக்லியை தொடர்ந்து அஜித்தின் ‘AK 64’ படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்க உள்ளார். ரேஸிங்கில் பிஸியாக உள்ள அஜித், அதை முடித்துவிட்டு இந்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள உள்ளார். இதனிடையே படத்தின் ஸ்பெஷல் அப்டேட்டை ஆதிக் கொடுத்துள்ளார். ‘GBU’ அஜித் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட நிலையில், ஃபேமிலி ஆக்ஷன் படமான ‘AK 64’ அனைத்து தரப்பு மக்களுக்குமான கதையாக இருக்கும் என ஆதிக் கூறியுள்ளார்.