News March 19, 2025
அரசு ஊழியர்களின் Retirement.. மத்திய அரசின் விளக்கம்

தற்போது மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60ஆக உள்ளது. இதனை 62 ஆக உயர்ந்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சிகளால் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ஓய்வு பெறும் வயதை உயர்த்தவோ, குறைக்கவோ திட்டம் எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 19, 2025
PM மோடியின் அரசியல் வழிகாட்டி காலமானார்!

RSS மூத்த நிர்வாகி மதுபாய் குல்கர்னி(88) காலமானார். 1942-ல் RSS-ல் இணைந்த இவர், மாவட்ட- மாநில பதவிகளில் அங்கம் வகித்துள்ளார். 1985-ல் இவர் மாநில நிர்வாகியாக இருந்த போது, மாவட்ட நிர்வாகியாக RSS பணிபுரிந்து வந்த தற்போதைய PM மோடியை BJP-ல் இணையும் படி இவர்தான் அறிவுறுத்தினார் என கூறப்படுகிறது. கடந்த 2015 வரை RSS-ல் பணியாற்றி, உடல்நல குறைவால் அதன்பிறகு பொதுவாழ்வில் சற்று விலகியுள்ளார்.
News September 19, 2025
மூலிகை: மருத்துவ குணங்கள் நிறைந்த புதினாக்கீரை!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி,
*புதினாக் கீரையை அரைத்து தொண்டையின் வெளிப்பகுதியில் பற்றுப்போட்டால் தொண்டைப் புண் ஆறிவிடும்.
*புதினாக் கீரை தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைத்து, இந்த தண்ணீரைக் குடித்து வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
*கைப்பிடி புதினாவுடன் கல் உப்பு கலந்து வெறும் வாணலியில் வறுத்து, சூட்டுடன் ஒரு துணியில் மூட்டையாக கட்டி பாதத்தில் ஒத்தடம் கொடுக்க எரிச்சல் குறையும். SHARE.
News September 19, 2025
ரயிலில் சிகரெட் பிடித்தால் என்ன அபராதம் தெரியுமா?

தட்டிக்கேட்ட ஆளில்லை என பலரும் ரயிலில் சிகரெட் பிடிப்பார்கள். ஆனால், ரயிலில் புகைபிடிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டதாகும். ரயில்வே சட்டம் 167வது பிரிவின் கீழ் சட்டப்படி குற்றமாகும். அப்படி, யாராவது மாட்டினால், அவருக்கு அபராதம் விதிக்கப்படும். இந்தியன் ரயில்வே தரப்பில் இருந்து அந்த பயணிக்கு ₹100- ₹500 வரை அபராதம் விதிக்கப்படும். இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.