News October 25, 2024
நடிப்பில் இருந்து 2025க்குள் ஓய்வு: TAKEN ஹீரோ

ஹாலிவுட்டில் TAKEN, BATMAN BEGINS உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் லீயம் நிசான். 72 வயதிலும் தொடர்ந்து ஆக்சன் படங்களில் கலக்கி வரும் அவர், இனிமேலும் தாம் சண்டை காட்சியில் நடித்து மக்களை ஏமாற்ற முடியாது என்று கூறியுள்ளார். நடிப்பதை ஏதேனும் ஒரு காலத்தில் நிறுத்திதான் ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ள அவர், 2025க்குள் நடிப்பில் இருந்து ஓய்வு பெறுவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News November 26, 2025
அறிவித்தார் திண்டுக்கல் கலெக்டர்

திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரி வளாகத்தில் நாளை (நவ.27) கல்விக் கடன் முகாம் நடைபெறவுள்ளதாக கலெக்டர் செ.சரவணன் தெரிவித்துள்ளார். உயர் கல்வி பயின்று வரும் மாணவர்களுக்காக மாவட்ட நிர்வாகம் (ம) அனைத்து வங்கிகள் இணைந்து நடத்தும் கல்வி கடன் முகாம் நடைபெறுகிறது. எனவே, இம்முகாமில் கல்வி கடன் தேவைப்படும் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (ஷேர் பண்ணுங்க)
News November 26, 2025
கர்நாடக CM ரேஸில் நியூ என்ட்ரியா?

கர்நாடக CM யார் என சித்தராமையா, டி.கே சிவக்குமாருக்கு இடையே போட்டி தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த ரேஸில் மேலும் ஒருவர் இணைந்துள்ளனர். அம்மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா வெளிப்படையாகவே தான் CM ரேஸில் இருப்பதாக கூறியுள்ளார். 2013-ல் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உதவியதால், அன்றிலிருந்து இன்றுவரை தான் எப்போதும் CM ரேஸில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
News November 26, 2025
மலச்சிக்கல் பிரச்னை நொடியில் நீங்கும்..

மலச்சிக்கல் பிரச்னைக்காக விலையுயர்ந்த மருந்துகள் எடுத்தும் தீர்வு கிடைக்கலையா? ஆவாரம் பூ இதற்கு ஒரு சிறந்த நிவாரணம் என ஆயுர்வேத டாக்டர்கள் சொல்றாங்க. இரவில் தூங்குவதற்கு முன் அரை ஸ்பூன் ஆவாரம் இலை பொடி, ஒரு சிட்டிகை கறுப்பு உப்பு இவற்றை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடியுங்கள். வாரத்திற்கு 2 முறை இப்படி செய்து வந்தால் மலச்சிக்கல் பிரச்னை நீங்கும். SHARE.


