News August 13, 2025
சில்லறை பணவீக்கம் கடும் சரிவு.. ஜாக்கிரதையாக இருங்க

கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத வகையில் நாட்டில் சில்லறை பணவீக்கம் 1.55% ஆக குறைந்துள்ளது. அரசின் CPI(consumer price index) அறிக்கையின்படி ஜூன் மாதத்தில் 2.1% ஆக இருந்த பணவீக்கம், ஜூலையில் 1.55% ஆக குறைந்தது. 2017 ஜூன் மாதத்திற்கு பிறகு சில்லறை பணவீக்கம் 2% கீழ் குறைவது இதுவே முதல்முறையாகும். பொதுவாக பணவீக்கம் குறைந்தால் நாட்டில் பொருளாதார மந்தநிலை ஏற்படுவதோடு வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும்.
Similar News
News August 14, 2025
அப்துல் கலாமுக்கு எதிராக வாக்களித்தது திமுக: EPS

அதிமுக என்ன செய்தது என்பதை சிறுபான்மையினர் உணர வேண்டும் என்று EPS கூறியுள்ளார். வாணியம்பாடியில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், ஜனாதிபதி தேர்தலுக்கு அப்துல் கலாம் நின்றபோது அவருக்கு எதிராக திமுக வாக்களித்ததாக சுட்டிக்காட்டினார். சிறுபான்மை மக்களை திமுக அரசு ஏமாற்றி வருவதாக குற்றஞ்சாட்டிய அவர், அடுத்து அதிமுக ஆட்சி அமையும் என்பதால் நீங்கள் பயப்பட வேண்டாம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
News August 14, 2025
ஹிந்தி பயன்பாட்டை அதிகரியுங்கள்: தெற்கு ரயில்வே

நாளை நாட்டின் 79-வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், இன்று முதல் செப்.15 வரை ரயில்வே அலுவலகப் பணிகளில் ஹிந்தி மொழி பயன்பாட்டை அதிகரிக்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. அஞ்சல் வழிச் செய்திகள், ரயில்வே உத்தரவுகள் உள்ளிட்டவற்றை ஹிந்தியில் வெளியிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இதன் நோக்கம் என்னவென்பது குறித்த தகவல்கள் இல்லை.
News August 14, 2025
நயினாரிடமே கேளுங்கள்.. கூட்டணியில் குழப்பம்?

பாஜகவுடன் மீண்டும் அதிமுக கைகோர்த்தது முதலே ‘கூட்டணி ஆட்சி’ விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதனால் இரு கட்சிகளிடையே உரசல் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், TTV தினகரனும் EPS-ம் ஒன்றாக மேடையேறுவர் என நயினார் நாகேந்திரன் கூறினார். இது நடக்குமா என்ற கேள்விக்கு, நயினாரிடமே கேளுங்கள் எனக் கூறியுள்ளார் EPS. எனவே, அதிமுக – பாஜக இடையே கருத்து வேறுபாடுகள் முற்றுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.