News August 5, 2024

97 நிறுவனங்களின் முடிவுகள் இன்று வெளியீடு

image

இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், தங்களது முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், இன்று 97 நிறுவனங்களின் முடிவுகள் வெளியாகின்றன. ஏர்டெல், ONGC, மாரிகோ, தீபக் நைட்ரேட், ஹனிவெல், மதர்சன் சுமி, டாடா கெமிக்கல்ஸ், அவந்தி ஃபீட்ஸ், ஓரியன்ட் சிமெண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ரிசல்ட் வெளியிடுகின்றன. இவை, சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.

Similar News

News January 18, 2026

BREAKING : இந்தியா அதிர்ச்சி தோல்வி

image

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ODI-ல் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முதலில் பேட் செய்த NZ, டேரில் மிட்செல், ஃபிலிப்ஸின் சதத்தால் 50 ஓவர்களில் 337 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய IND, 75 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. விராட் கோலி சதம் அடித்து போராடினாலும், 296 ரன்களுக்கு IND ஆல் அவுட்டானது. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் ODI தொடரை நியூசிலாந்து வென்றுள்ளது

News January 18, 2026

பெரியாரை திட்டி திட்டியே…. மாரி செல்வராஜ்

image

பெரியாரை திட்டுவதன் மூலம் ஒருவர் பெரிய சிந்தனையாளர் ஆக முடியாது என இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியுள்ளார். தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் அவருக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது. அப்போது, பெரியாரை படித்து விட்டு, அவரை திட்டி திட்டியே எளிதாக பிரபலமாகலாம். ஆனால் ஆசானை ஜெயிப்பது என்பது அவரிடம் இருந்து பாராட்டு பெறுவது தானே தவிர, அவரை குறைசொல்லி அல்ல எனவும் கூறியுள்ளார்.

News January 18, 2026

PM மோடியை வழிநடத்தும் தர்மம் : மோகன் பகவத்

image

தர்மத்தின் மூலமாகவே உலகின் விஸ்வகுருவாக இந்தியாவால் உருவெடுக்க முடியும் என மோகன் பகவத் கூறியுள்ளார். தர்மம் என்ற வாகனத்தில் பயணித்தால் யாருக்கும் விபத்து ஏற்படாது என்றும், அதே ஆற்றல் தான் தன்னை, PM மோடி மற்றும் பொதுமக்களை வழிநடத்துவதாக அவர் குறிப்பிட்டார். ஒரு நாடு மதச்சார்பின்மையாக இருக்கலாம், ஆனால் தர்மத்தை பின்பற்றாமல் வாழ முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!