News October 28, 2025
ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் கிடைத்த மரியாதை: CPR

துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பின் முதல்முறையாக கோவை வந்த CP ராதாகிருஷ்ணன், கொடிசியா அரங்கில் நடைபெற்ற தொழில் துறையினருடனான கலந்துரையாடலில் பங்கேற்றார். இதில் துணை ஜனாதிபதி பதவி என்பது எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் கிடைத்த மரியாதை என அவர் தெரிவித்தார். நாடு உயர்ந்தால் தான் நாம் வளர முடியும் என்றும், விவசாயம், தொழில்துறை இரண்டும் நாட்டின் வளர்சிக்கு முக்கியம் எனவும் கூறினார்.
Similar News
News November 9, 2025
பிஹாரில் தேர்தல் பரப்புரை ஓய்ந்தது

பிஹாரில் அனல் பறந்த 2-ம் கட்ட தேர்தல் பரப்புரை மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. கடந்த 6-ம் தேதி 121 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், 122 தொகுதிகளுக்கான 2-ம் கட்ட தேர்தல் வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது. 3.70 கோடி வாக்காளர்கள் இதில் வாக்களிக்க உள்ள நிலையில், 1,307 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர்.
News November 9, 2025
BREAKING: விஜய் அப்பாவுக்கு முக்கிய பொறுப்பு

தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, SAC தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் இருந்தபோது, ₹8 கோடி வரை முறைகேடு நடந்ததாக SAC குற்றஞ்சாட்டினார். இதனையடுத்து, அவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. குழு அளிக்கும் தகவலின்படி, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
News November 9, 2025
அடி அலையே ஸ்ரீலீலா PHOTOS

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான ஸ்ரீலீலா, சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்னரே, தனது நடனம் மற்றும் நடிப்பு மூலம் தமிழ் ரசிகர்களை ஈர்த்துவிட்டார். புஷ்பா- 2 படத்தில் ஆடிய ஆட்டத்தில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். இவரது சமீபத்திய போட்டோஸ் உங்களுக்கு பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.


