News March 16, 2024
“மநீமவில் இருந்து விலகுகிறேன்”

மநீமவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மாநில பரப்புரை செயலாளர் டாக்டர் அனுஷா ரவி அறிவித்துள்ளார். கமலுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மநீமவில் 3 ஆண்டுகள் பயணம் செய்ததில் மகிழ்ச்சி; இருப்பினும் தேர்தல் அரசியலில் மநீம பங்கேற்காமல் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இதனால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்கிறேன் என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News November 5, 2025
நாள் முழுக்க கம்ப்யூட்டர், ஃபோன் பார்க்குறீங்களா?

உங்கள் கண்கள் பாதிக்கப்படலாம் என தெரிந்தும் வேலைக்கு போனால் கம்ப்யூட்டர், வீட்டுக்கு வந்தால் ரீல்ஸ் என தினமும் அந்த Screen-ஐ பார்த்துட்டே இருக்கீங்களா? கண்களுக்கு பாதிப்பு வராமல் காக்க சில டிப்ஸ் இருக்கு. 20 நிமிடங்களுக்கு ஒருமுறை 20 அடி தூரம் உள்ள ஏதேனும் ஒரு பொருளை 20 நொடிகளுக்காவது பார்க்க வேண்டும். கண்களை அடிக்கடி சிமிட்டுங்க. Screen Time-ஐயும் குறைத்துகொள்வது நல்லது. SHARE THIS.
News November 5, 2025
தங்கம் விலை மீண்டும் குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. அதன்படி நேற்று 1 அவுன்ஸ்(28g) தங்கம் $3,986-க்கு விற்பனையான நிலையில், இன்று(நவ.5) $45 குறைந்து $3,941.48-க்கு விற்பனையாகிறது. நேற்று, தங்கம் விலை சரிவுடன் முடிந்த நிலையில், சர்வதேச சந்தையில் இதே நிலை நீடித்தால் இன்றும் நம்மூர் சந்தையில் தங்கம் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News November 5, 2025
பிஹார் தேர்தலில் வெற்றி யாருக்கு: கருத்துக்கணிப்பு

பிஹாரில் நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஐஏஎன்எஸ் – மேட்ரிக்ஸ் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இதில், நிதிஷ் தலைமையிலான NDA கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 243 இடங்களில் பாஜக – 83 -87 இடங்கள், ஜேடியு 61-65 இடங்கள், காங்., 7 -9 இடங்கள், ஆர்ஜேடி 63 -66 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.


