News April 15, 2025
டாய்லெட் பேப்பரில் ராஜினாமா கடிதம்.. இது வேற ரகம்

பல நிறுவனங்களில் ஊழியர்களை தேவைக்கு பயன்படுத்திவிட்டு பின் குப்பை போல் தூக்கி எறிவதை பார்த்திருப்போம். இதனை உணர்த்தும் வகையில் ஊழியர் ஒருவர் ராஜினாமா செய்த விதம் பலரின் கவனத்தை பெற்றுள்ளது. சிங்கப்பூரில் தன்னை சரியாக நடத்தாத நிறுவனத்துக்கு, டாய்லெட் பேப்பரில் ஊழியர் ராஜினாமா கடிதத்தை எழுதியுள்ளார். ஆஞ்சிலா யோஹ் என்ற பெண் தொழிலதிபர் இச்சம்பவத்தை Linkedin பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Similar News
News December 4, 2025
ஆணுறைகளுக்கு வரி விதித்த சீனா.. ஏன் தெரியுமா?

ஆணுறை உள்ளிட்ட கருத்தடை சாதனங்கள் மீது, 2026 ஜனவரி முதல் வரி விதிக்க சீன அரசு முடிவு செய்துள்ளது. அந்நாட்டில் தொடர்ந்து குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதனால், இத்தகைய வரி விதிப்பின் மூலம் பிறப்பு விகிதம் அதிகரிக்கும் என சீனா நம்புகிறது. ஒரு குழந்தை கொள்கையை கடுமையாக கடைபிடித்து வந்த சீனா, 1993 முதல் கருத்தடை சாதனங்களுக்கு வரிவிலக்கு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
News December 4, 2025
டிசம்பர் 4: வரலாற்றில் இன்று

*1898–இயற்பியலாளர் கே.எஸ்.கிருஷ்ணன் பிறந்தநாள் *1910–முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் பிறந்தநாள் *1953-தமிழறிஞர் அ.வேங்கடாசலம் பிள்ளை நினைவு நாள் *1971-இந்திய கடற்படை கராச்சி துறைமுகத்தை தாக்கியது *1974–நடிகை அனுபமா குமார் பிறந்தநாள் *1984–மன்னாரில் இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலில் 150 தமிழ் மக்கள் படுகொலை
News December 4, 2025
T20 WC: இந்திய அணியின் ஜெர்ஸி அறிமுகம்

2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய வீரர்கள் அணியவுள்ள புதிய ஜெர்ஸி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ராய்ப்பூரில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ODI இடைவேளையின் போது ரோஹித் சர்மாவும், திலக் வர்மாவும் புதிய ஜெர்ஸியை அறிமுகம் செய்து வைத்தனர். மேலும், மைதானத்தில் பிரமாண்ட ஜெர்ஸியும் ரசிகர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. இந்திய அணியின் புது ஜெர்ஸி எப்படி இருக்கு? கமெண்ட் பண்ணுங்க


