News June 17, 2024

எம்.பி பதவியை ராஜினாமா செய்யுங்கள்: ஏக்நாத் ஷிண்டே

image

வாக்குப் பதிவு இயந்திரத்தில் சந்தேகம் இருந்தால் ராகுல் காந்தி தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடட்டும் என மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தோற்றதால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவறு நடந்துள்ளது என்று கூறுவது நல்ல அரசியல் அல்ல என விமர்சித்துள்ளார். முன்னதாக, இவிஎம் இயந்திரத்தை கருப்பு பெட்டியோடு ஒப்பிட்டு ராகுல் பேசியிருந்தார்.

Similar News

News March 16, 2026

பதவி பறிக்கப்படும்: ஸ்டாலின் எச்சரிக்கை

image

தேர்தல் முடியும் வரை எந்த உள்கட்சி பிரச்னையும் இருக்கக்கூடாது என்று திமுக மா.செ.,க்களுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தேவையின்றி குழப்பமோ, பிரச்னையோ உண்டாக்கி அது என் காதுகளுக்கு வந்தால், எந்த பெரிய பொறுப்புகளில் இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை பாயும் என்று எச்சரித்துள்ளார். அதிக வெற்றியை பெற்று தருபவர்களுக்கே அமைச்சர் பதவி என்றும் அவர் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.

News March 16, 2026

வீட்டு சிலிண்டர்.. நாட்டு மக்களுக்கு அரசு அறிவிப்பு

image

நாட்டில் நிலவும் கேஸ் தட்டுப்பாடு குறித்து மக்கள் பதற்றமடைய வேண்டாம் என மத்திய பெட்ரோலியத் துறை மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், சிலிண்டர் பதுக்குதல், கள்ளச் சந்தையில் விற்பதை தடுக்க மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேவை இல்லாத நிலையிலும் பீதியுடன் முன்பதிவு செய்வதை மக்கள் தவிர்க்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. SHARE IT

News March 16, 2026

நடிகை ஊர்வசி மகளின் புதிய PHOTOS

image

நடிகை ஊர்வசி, நடிகர் மனோஜ் கே விஜயனின் மகள் தேஜலட்சுமியின் போட்டோக்கள் படுவைரலாகி வருகின்றன. நடிப்பின் மீது ஆர்வம் கொண்டுள்ள தேஜலட்சுமி, சுந்தரியவள் ஸ்டெல்லா என்ற படத்திலும் நடித்துள்ளார். தொடர்ந்து இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் தேஜலட்சுமி, Vintage ஸ்டைலில் பதிவிட்ட போட்டோஸ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளது. ஊர்வசியை போலவே இவரும் ரசிகர்களை கவருவாரா?

error: Content is protected !!