News June 5, 2024
பாஜகவுக்கு கை கொடுக்காத இடஒதுக்கீடு பிரசாரம்

தேர்தல் பிரசாரத்தின் போது, எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு குறித்து மோடி, பாஜக தலைவர்கள் பல வாக்குறுதி அளித்தனர். இதனால், 131 எஸ்சி, எஸ்டி தனித் தொகுதிகளில் பாஜக அதிக இடங்களில் வெல்லக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 53இல் மட்டுமே பாஜக வென்றுள்ளது. 2019 தேர்தலில் 77இல் வென்ற நிலையில், இம்முறை 24 தொகுதிகள் குறைந்துள்ளன. காங்கிரஸ் கட்சி 12 இடங்கள் கூடுதலாக 33இல் வென்றுள்ளது.
Similar News
News August 9, 2025
கணவன் காதில் பாய்சன் ஊற்றிய மனைவி

தெலுங்கானாவில் இச்சம்பவம் நடந்துள்ளது. மது அடிமையான சம்பத்துக்கும், மனைவி ரமாதேவிக்கும் எப்போதும் சண்டை தான். தன் கடை வருமானத்திலேயே, ரமாதேவி குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடைக்கு வரும் ராஜய்யாவுடன் கள்ள உறவு ஏற்பட, இருவரும் சம்பத்தை கொல்ல முடிவு செய்தனர். உறங்கிக் கொண்டிருந்த சம்பத் காதில், இருவரும் விஷத்தை ஊற்ற, அப்போதே அவர் உயிரிழந்தார். இருவரும் இப்போது கம்பி எண்ணுகின்றனர்.
News August 9, 2025
தனுஷ் உடன் காதலா?.. மிருணாள் தாகூர் விளக்கம்

2 நாள்களாக சோஷியல் மீடியாவை திறந்தாலே தனுஷ் – மிருணாள் காதல் விவகாரம்தான் முன்னால் வந்து நிற்கிறது. இருவரும் ரகசியமாக காதலித்து வருவதாகக் கூறப்பட்ட நிலையில், மிருணாள் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில், தனுஷ் தனக்கு நல்ல நண்பர் மட்டுமே என்றும், தங்களை பற்றிய வதந்தி குறித்து தெரிந்தபோது சிரிப்புதான் வந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வளவுதான் பஞ்சாயத்து முடிஞ்சு போச்சு!
News August 9, 2025
ATM-ல் பணம் போட்டாலும் கட்டணம், எடுத்தாலும் கட்டணம்

மாதாந்தர மினிமம் பேலன்ஸை <<17350157>>₹50,000-ஆக<<>> உயர்த்திய ICICI வங்கி, ATM கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது. ICICI ATM-களில் முதல் 3 வித்டிராயல் இலவசம். அதன்பின், ஒவ்வொரு முறையும் ₹23 கட்டணம் விதிக்கப்படும். ICICI கிளைகள் & ATM-களில் பணம் டெபாசிட் செய்யவும் முதல் 3 முறை மட்டும் இலவசம். அதன்பின், ஒவ்வொரு முறையும் ₹150 (அ) ஒவ்வொரு ₹1,000-க்கும் ₹3.5 வீதம்- இதில் எது அதிகமோ, அத்தொகை கட்டணமாக விதிக்கப்படும்.