News April 20, 2025
ஷேக் ஹசீனாவை பிடிக்க இண்டர்போலிடம் கோரிக்கை

ஷேக் ஹசீனா உள்பட 11 பேரை பிடிக்க இண்டர்போலின் உதவியை வங்கதேச இடைக்கால அரசு நாடியுள்ளது. இடைக்கால அரசை கவிழ்க்க சதி மற்றும் உள்நாட்டு போரை ஏற்படுத்த முயன்ற குற்றத்திற்காக ரெட் நோட்டீஸ் பிறப்பிக்குமாறு இண்டர்போலிடம் வங்கதேச அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ரெட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டால், இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனா நாடுகடத்தப்பட்டு கைது செய்யப்படுவார்.
Similar News
News November 5, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 5, ஐப்பசி 19 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: பவுர்ணமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை
News November 5, 2025
எந்த பெண்ணிற்கும் நடக்க கூடாத கொடூரம்: சிபிஆர்

கோவை கொடூரத்தில் பாதிக்கப்பட பெண்ணுக்கு, நாம் உறுதுணையாக நிற்க வேண்டும் என துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். உண்மையிலேயே எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாத கொடூரமானது கொங்கு மண்ணில் நடந்தது தாங்க முடியாத வேதனையை தருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தருவது போலீசின் பொறுப்பு என்று சிபி ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.
News November 5, 2025
கோவை கொடூரத்தால் மிகுந்த வேதனை: கனிமொழி

கோவை கொடூரத்தில், குற்றம் செய்தவர்களை கடும் தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும் என கனிமொழி தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து, பாதுகாப்பான சூழலை உறுதிசெய்யாமல் நாம் பண்பட்ட சமூகம் என்று சொல்லிக் கொள்ள முடியாது என X-ல் அவர் பதிவிட்டுள்ளார். இச்சம்பவம் வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ள கனிமொழி, பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நீதி கிடைத்திட துணை நிற்போம் என்றும் கூறியுள்ளார்.


