News March 19, 2024
ஓபிஎஸ்-இன் மனுவை நிராகரிக்க கோரிக்கை

கட்சிப் பெயர் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அளித்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று இபிஎஸ் தரப்பு மனு அளித்துள்ளது. அதிமுக (ஓபிஎஸ்) என்ற பெயரை வரும் தேர்தலில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் இரட்டை இலை சின்னத்துக்கு பதிலாக இரண்டு அணிகளுக்கும் தனி சின்னத்தை வழங்க வேண்டும் என்று ஓபிஎஸ் நேற்று மனு அளித்திருந்தார். அதற்கு எதிராக இபிஎஸ் தற்போது மனு அளித்துள்ளார்.
Similar News
News November 22, 2025
12th பாஸ் போதும்.. ரயில்வேயில் 3,058 பணியிடங்கள்!

இந்திய ரயில்வேயில் 3,058 Ticket Clerk, Accounts Clerk காலிப் பணியிடங்கள் உள்ளன. Ticket Clerk பணிக்கு 12-வது பாஸ் செய்திருந்தால் போதும். Accounts Clerk பணிக்கு டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும். இதற்கு ₹20,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. நவ.27-க்குள் <
News November 22, 2025
சீமானின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

நெல்லை பணக்குடியில் இன்று சீமான் தலைமையில் நடக்கவிருந்த மாடு மேய்க்கும் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், போராட்டத்திற்காக பணக்குடி சென்ற நாதகவினரை தடுத்து நிறுத்தி போலீசார் நள்ளிரவில் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே, தடையை மீறி தேனியில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் நடத்தியதுபோல், இன்றும் போராட்டம் நடக்கும் என நாதகவினர் கூறுகின்றனர்.
News November 22, 2025
திமுக மூத்த தலைவர் பழனியப்பன் காலமானார்

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், வெள்ளக்கிணறு பேரூராட்சி Ex தலைவருமான வெ.நா.பழனியப்பன் உடல் நலக்குறைவால் காலமானார். இவர், திமுகவில் பொதுக்குழு உறுப்பினர், தலைமைச் செயற்குழு உறுப்பினர், ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் அவைத் தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளிலிருந்துள்ளார். வெ.நா.பழனியப்பன் மறைவுக்கு Ex அமைச்சர் செந்தில் பாலாஜி, உள்ளிட்ட திமுக முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


