News April 16, 2025
மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்: CM

மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன முறையில் பிரதிநிதித்துவம் வழங்கும் சட்டத்திருத்தம் பேரவையில் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து உரையாற்றிய CM ஸ்டாலின், இந்த சட்டத்திருத்தத்தால் உள்ளாட்சி அமைப்புகளில் 12,000 மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என கூறினார். எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கத்திலும், குரலற்றவர்களின் குரலாகவும் திராவிட மாடல் ஆட்சி இருக்கும் என்றும் உறுதியளித்தார்.
Similar News
News November 3, 2025
இந்தியாவின் அண்டை நாடுகள் அணு ஆயுத சோதனை

சீனாவும், பாகிஸ்தானும் ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இதை குறிப்பிட்டு, அமெரிக்கா அணு ஆயுத சோதனை நடத்த உள்ளதை வெளிப்படையாக அறிவித்ததை நியாயப்படுத்தியுள்ளார். மேலும், ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்தியா – பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர் மூளும் அபாயம் இருந்ததாகவும், தான் குறுக்கிடவில்லை என்றால் பல உயிர்கள் கொல்லப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
News November 3, 2025
‘இரவு 12 மணி’: மம்தாவை வறுத்தெடுத்த பாஜக

மே.வங்க வன்கொடுமை சம்பவத்தின் போது, இரவு 8 மணிக்கு மேல் மாணவிகளை வெளியே அனுமதிக்க கூடாது என்று மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்த மம்தா பானர்ஜியை, பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. “யாரும் இரவில் வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தியிருந்தீர்கள். ஆனால், நம் வீராங்கனைகள் இரவு 12 மணி வரை விளையாடினார்களே!” என்று X-ல் பதிவிட்டுள்ளது.
News November 3, 2025
புயல் சின்னம்.. மழை பொளந்து கட்டும்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், வட தமிழகத்தில் ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 7 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரத்தில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. மேலும், நவ.9 வரை தமிழகத்தில் மழை தொடரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் கவனமாக இருங்க!


