News June 7, 2024
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

வங்கிகளுக்கு கடன் வழங்கும் ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக தொடரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த ரெப்போ வட்டியின் அடிப்படையிலேயே மக்கள் பெறும் கடனுக்கான வட்டி நிர்ணயிக்கப்படும். பணவீக்கம் அதிகமாக உள்ளதால், ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாற்றமில்லை என்று அறிவித்திருப்பது லோன் பெற்றவர்களை நிம்மதியடையச் செய்துள்ளது.
Similar News
News September 23, 2025
வாக்கு திருட்டு நடக்கும் வரை உழலும் நீடிக்கும்: ராகுல்

வாக்குகளை திருடி, அமைப்புகளை கைப்பற்றி பாஜக ஆட்சியில் அமர்ந்ததால் தான், நாட்டில் வேலையின்மை தலை விரித்து ஆடுவதாக ராகுல் காந்தி சாடியுள்ளார். வருங்காலத்திற்காக இளைஞர்கள் கடினமாக உழைத்து வரும் நிலையில், PM மோடியோ தனது பணக்கார நண்பர்கள் ஆதாயம் அடைய பாடுபடுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், வாக்கு திருட்டு நடைபெறும் வரை, இந்தியாவில் ஊழலும், வேலையின்மையும் நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
News September 23, 2025
10, 12-ம் வகுப்பு தேர்வு தேதியில் மாற்றமா?

தமிழக சட்டப் பேரவை தேர்தல் 2026 மே 2-வது வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை முன்னரே முடிப்பது மட்டுமல்லாமல், முடிவுகளையும் மே முதல் வாரத்திலேயே வெளியிட அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கல்வியாண்டின் கடைசி வேலை நாள் ஏப்.24 என்பதால், ஏப்.10-ம் தேதிக்குள் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை முடிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாம்.
News September 23, 2025
12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை

தமிழகத்தில் அடுத்த சில மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே, மழையில் நனைவதை தவிர்க்க, வெளியே செல்லும்போது மறக்காமல் குடை எடுத்துச் செல்லுங்கள்.