News April 4, 2025

பதிலுக்கு பதில் வரி… அப்படிப்போடு

image

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 34% வரி விதிக்கப்படும் என்று சீனா அறிவித்துள்ளது. உலக நாடுகள் அனைத்திற்கும் அதிரடியாக வரி விதித்திருக்கிறார் அமெரிக்காவின் புதிய அதிபர் டிரம்ப். இதனால், உலக பொருளாதாரமே திக்குமுக்காடி வருகிறது. இந்நிலையில், பதிலுக்கு பதில் சீனாவும் வரி விதித்துள்ளதால், மறைமுக வர்த்தகப் போர் தொடங்கியிருக்கிறது.

Similar News

News April 12, 2025

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு!

image

கோவை வெள்ளியங்கிரி மலையேறிய காஞ்சிபுரத்தை சேர்ந்த ரமேஷ் என்ற பக்தர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். கடந்த ஆண்டு மலையேறியவர்களில் 9க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களில் பலருக்கு இதய நோய் இருந்தது தெரிந்தது. இதேபோல் இந்த ஆண்டும் உயிரிழப்பு தொடர்கிறது. எனவே, இதய நோய், மூச்சுத் திணறல் உள்ளவர்கள் முழு உடல் பரிசோதனைக்குப் பின் மலையேறுவது நல்லது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 12, 2025

NDA கூட்டணியில் அமமுக நீடிக்கிறது: டிடிவி தினகரன்

image

தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே அமமுக நீடிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2021 தேர்தலில் அமித்ஷாவின் பேச்சை கேட்டு நடந்திருந்தால், திமுக ஆட்சிக்கு வந்திருக்காது எனக் கூறிய அவர், ஓபிஎஸ்ஸை பாஜக கைவிட்டதாக பேசுவது தவறு என்றார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்குவது கவனிக்கத்தக்கது.

News April 12, 2025

வேலை செய்யாத UPI.. திண்டாடும் மக்கள்!

image

நாடு முழுவதும் UPI பரிவர்த்தனைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது Google Pay, Paytm, PhonePe என எதுவும் வேலை செய்யவில்லை. மக்கள் திண்டாடி வருகின்றனர். இன்று காலை முதலே வேலை செய்யாததால் மக்கள் பரிதவித்து வருகின்றனர். இந்த பாதிப்பு எந்த காரணத்தால் என தெரியவில்லை.

error: Content is protected !!