News October 26, 2024
தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுப்பதா?: OPS

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக, தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள OPS, அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு மூடுவிழா நடத்த திமுக அரசு முடிவு செய்துவிட்டதா? என வினவியுள்ளார். மேலும், அரசுப் பேருந்துகளை முழுமையாக இயக்கி மக்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News August 24, 2025
உடனடியாக ₹5 லட்சம் கடன்.. தமிழக அரசு அறிவிப்பு

விவசாயிகள் விண்ணப்பித்த ஒரே நாளில் ₹5 லட்சம் வரை பயிர்க்கடன் வழங்கப்படுவதாக TN அரசு தெரிவித்துள்ளது. நெல், கரும்பு, பருத்தி, நிலக்கடலை, மக்காச்சோளம் ஆகியவற்றை பயிரிட இந்த கடன்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நடப்பாண்டில் ₹17,000 கோடி பயிர்க்கடனும், ₹3,000 கோடி கால்நடை வளர்ப்புக் கடனும் வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. SHARE IT.
News August 24, 2025
இது வெட்கக்கேடு: திமுக அரசுக்கு சீமான் கேள்வி

தூய்மைப் பணியின் போது உயிரிழந்த வரலட்சுமி குடும்பத்துக்கு ₹1 கோடி நிதி வழங்க வேண்டுமென சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இதுபற்றி சீமான் வெளியிட்ட அறிக்கையில், மனிதக் கழிவை மனிதனே அள்ளும் அவல நிலை தற்போதும் தொடர்வதாகவும், அதில் ஆதித்தொல்குடி மக்களே ஈடுபடுத்தப்படுவதும் வெட்கக்கேடானது இல்லையா? இதுதான் குலத்தொழிலுக்கு எதிரான திமுக அரசின் முற்போக்கு செயல்பாடா? என கேட்டுள்ளார்.
News August 24, 2025
10% வாக்குறுதிகள் கூட நிறைவேற்றவில்லை: இபிஎஸ்

திமுக ஆட்சி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் இபிஎஸ் சாடினார். திருவெறும்பூரில் பேசிய அவர், தேர்தல் அறிக்கையில் சொன்னதில் 10% கூட திமுக நிறைவேற்றவில்லை என்றும், ஆனால் 98% வாக்குறுதிகள் நிறைவேற்றியதாக திமுக கூறுவது பொய் என்றார். மேலும், தேர்தலை கணக்கிட்டே 30 லட்சம் மகளிர்களுக்கு உரிமை தொகை வழங்குவதாக திமுக அரசு அறிவித்துள்ளதாகவும் கூறினார்.