News April 3, 2025

பிரபல மொழியியல் ஆராய்ச்சியாளர் காலமானார்

image

பிரபல மொழியியல் ஆராய்ச்சியாளரும், ஓய்வு பெற்ற பேராசிரியருமான வேணுகோபால பணிக்கர்(79) காலமானார். கேரளாவைச் சேர்ந்த இவர், அண்ணாமலை பல்கலையில் பயின்றவர். ஜெர்மனியில் நடந்த முதல் சர்வதேச திராவிட மாநாடு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச மாநாடுகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார். இவரது தமிழ் மொழிபெயர்ப்பு நாவலான ‘கூனந்தோப்பு’ கேந்திர சாகித்ய அகாடமி விருது வென்றுள்ளது.

Similar News

News April 4, 2025

‘அதிமுக பொதுச் செயலாளர் செங்கோட்டையன்’ போஸ்டர்

image

மதுரையில் இபிஎஸ்-க்கு எதிராகவும், செங்கோட்டையனுக்கு ஆதரவாகவும் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் தமிழக அரசியலில் புதிய புயல் கிளம்பியுள்ளது. இபிஎஸ் புகைப்படத்தை புறக்கணித்துவிட்டு, செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மற்றும் ராஜன் செல்லப்பா ஆகியோர் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ஹைலைட் என்னவென்றால் ‘அதிமுக பொதுச் செயலாளர் செங்கோட்டையன்’ என குறிப்பிடப்பட்டுள்ளது தான். இதுகுறித்து உங்கள் கருத்து?

News April 4, 2025

காவல் சார்பு ஆய்வாளர் தேர்வு அறிவிப்பு

image

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான நேரடித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தாலுகா மற்றும் ஆயுதப் படையில் உள்ள 1,299 காலிப் பணியிடங்களுக்கு வரும் 7ஆம் தேதி முதல் <>www.tnusrb.tn.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB)அறிவித்துள்ளது.

News April 4, 2025

சிவஞானம் மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல்

image

மூத்த பத்திரிகையாளர் சிவஞானம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னணி தொலைக்காட்சிகளில் திறம்பட பணியாற்றிய ஆற்றல்மிக்க, ஆளுமை குணம் தாங்கிய சிவஞானம் மறைவு அதிர்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர், அவரை இழந்துவாடும் உறவினர்கள் மற்றும் ஊடக நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகத் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!