News April 29, 2025

பிரபல இயக்குநர் ஷாஜி N கருண் காலமானார்

image

பிரபல மலையாள இயக்குநர் ஷாஜி N கருண் (73) உடல்நலக்குறைவால் காலமானார். மலையாள சினிமாவுக்கு தேசிய, சர்வதேச தளங்களில் பெருமை சேர்த்த இயக்குநர்களில் இவர் முக்கியமானவர். இவர் இயக்கிய Piravi (1988), vanaprastham (1999), kutty srank (2009) திரைப்படங்களுக்கு தேசிய விருதினை பெற்றவர். அதுமட்டுமல்ல, Piravi, Swaham, vanaprastham ஆகிய திரைப்படங்கள் கேன்ஸ் திரைப்பட விழாவில் தேர்வாகி பாராட்டுகளைப் பெற்றன.

Similar News

News August 30, 2025

புரூஸ் லீ பொன்மொழிகள்

image

★அறிவு உங்களுக்கு அதிகாரத்தை தரலாம், ஆனால் நல்ல குணம் மட்டுமே மரியாதையை தேடிக் கொடுக்கும்
★நீங்கள் எதைச் சிந்திக்கிறீர்களோ, அதை நோக்கியே உங்கள் வாழ்க்கை நகரும்.
★பெரும் முயற்சிகள் தோல்வியுற்றாலும் கூட அவை போற்றத்தக்கவை.
★மகிழ்ச்சியாக இருங்கள், ஆனால் ஒருபோதும் திருப்தி அடையாதீர்கள்.

News August 30, 2025

எதிர்பார்ப்பை மிஞ்சிய இந்தியாவின் GDP

image

2025-26ஆம் நிதியாண்டின் ஏப்ரல்- ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டின் இந்திய உள்நாட்டு உற்பத்தி 7.8% என தரவுகள் தெரிவிக்கின்றன. ஹோட்டல், நிதி, ரியல் எஸ்டேட் உள்ளிட்டவை இந்த வளர்ச்சிக்கும் முக்கிய காரணங்களாம். RBI கணிப்பை விட GDP அதிகரித்துள்ளது. இதற்கு முன்னதாக 2024 ஜனவரி-மார்ச் மாத காலாண்டில் GDP 8.4% இருந்தது. அதன்பின் ஐந்து காலாண்டிற்கு பிறகு தற்போது 7.8% அதிகரித்துள்ளது.

News August 30, 2025

‘ராட்சசன்’ போல் இருக்குமா ‘ஆர்யன்’?

image

த்ரில்லர் படங்களில் பலரின் பேவரைட் ‘ராட்சசன்’ என்று சொல்லலாம். மீண்டும் அதேபோன்ற படத்தை விஷ்ணு விஷாலிடம் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், அதேபோல் ஒரு போலீஸ் இன்வெஸ்டிகேஷன் கதையான ஆர்யனில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார். ‘ஆர்யன்’ படம் வரும் அக்டோபர் 31-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா விஷ்ணு விஷால்?

error: Content is protected !!