News April 20, 2025
கட்சியில் இருந்து நீக்கி விடுங்கள்: மல்லை சத்யா

இன்று நடைபெற்ற மதிமுக நிர்வாகக்குழு கூட்டத்தில், துரை வைகோ – மல்லை சத்யா இடையேயான மோதல் பூதாகரமானது. துரை வைகோவுக்கு 40 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், தன்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுமாறு மல்லை சத்யா கோரிக்கை வைத்துள்ளார். கடைசி வரை வைகோவின் தொண்டனாக இருந்துவிட்டு போகிறேன் என்று கட்சியின் துணை பொதுச்செயலாளரான அவர் பேசினார்.
Similar News
News January 10, 2026
மீண்டும் விஜய் – அஜித் மோதல்?

‘ஜனநாயகன்’ தொடர்பான வழக்கு விசாரணை ஜன.21-க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஜன.23-ல் அஜித்தின் ‘மங்காத்தா’ ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது. ஒருவேளை ஜனநாயகனுக்கு சர்டிபிகேட் கிளியர் ஆனால், அப்படமும் ஜன.23-ல் வெளியாக வாய்ப்புள்ளது. ஜன நாயகன் பிரச்னை தீர்ந்தால், வாரிசு – துணிவு படங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் – அஜித் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. மீண்டும் ஒரு Clash-க்கு ரெடியா?
News January 10, 2026
விஜய்யை அடிபணிய வைக்க முயற்சியா? கருணாஸ்

விஜய்யின் ஜனநாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காமல் போனது துரதிர்ஷ்டமான விஷயம் என கருணாஸ் தெரிவித்துள்ளார். ஏதோ ஒரு அரசியல் சூழ்ச்சிக்காக விஜய்யை அடிபணிய வைக்கவும், நிர்பந்தத்தை ஏற்படுத்தவும் தணிக்கை வாரியத்தை மத்திய அரசு பயன்படுத்துகிறதோ என்ற சந்தேகம் எழுவதாக அவர் கூறியுள்ளார். மேலும், இப்பிரச்னையில் விஜய்க்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் துணைநிற்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
News January 10, 2026
பொங்கல் பணம்.. கடைசி நேரத்தில் சிக்கல்

புதுச்சேரியில் பொங்கல் பரிசு ₹4000 வழங்க, CM ரங்கசாமி அனுப்பிய கோப்புகளை நிதித்துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர். 3.50 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க சுமார் ₹140 கோடியை ஒதுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், போதிய நிதி இல்லை என கூறி அதிகாரிகள் அந்த கோப்புகளை திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் அங்கு பொங்கல் பணம் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


