News May 24, 2024
நாளை புயலாக உருவெடுக்கும் ரெமல்

மத்திய வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை காலை புயலாக வலுப்பெறும். இந்த புயலுக்கு ரெமல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரெமல் தீவிரப் புயலாக வலுப்பெற்று மே 26ஆம் தேதி நள்ளிரவில் வங்கதேசம் அருகே சாகர் தீவுக்கும் கேப்புபராவுக்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News March 6, 2026
2-வது குழந்தை பெறுவோருக்கு ₹25,000..

பிறப்பு விகிதத்தை உயர்த்த புதிய திட்டத்தை AP அரசு பரிசீலித்து வருகிறது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தையை பெறுவோருக்கு, ₹25,000 ஊக்கத்தொகை வழங்க திட்டமிட்டுள்ளதாக CM சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மாநிலத்தின் கருவுறுதல் விகிதத்தை 1.5-ல் இருந்து 2.1 ஆக உயர்த்துவதே அரசின் நோக்கம் என கூறியுள்ளார். மேலும், மக்கள் தொகை மேலாண்மைக்கான புதிய கொள்கை மார்ச் இறுதிக்குள் அறிவிக்கப்படவுள்ளதாம்.
News March 6, 2026
நகைக்கடன் தள்ளுபடி.. இனிப்பான செய்தி வந்தாச்சு

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குறித்த வாக்குறுதியை அரசியல் கட்சிகள் அளிக்கும் என பொதுமக்கள் எதிர்பார்கின்றனர். இதனால் சமீபமாக கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெறுவதற்கு பலரும் முனைப்பு காட்டுகின்றனர். ஆனால், தற்போதைய நிதிச்சூழலை பொறுத்து அரசியல் கட்சிகள் முடிவெடுக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும், தேர்தல் வாக்குறுதியாக நிச்சயமாக நகைக்கடன் தள்ளுபடி இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
News March 6, 2026
ராகுல் மீது காங்கிரஸ் சீனியர்கள் அதிருப்தியா?

ராகுலுக்கு நெருக்கமான கிறிஸ்டோபர் திலக், ராஜ்யசபா MP வேட்பாளராக அறிவிக்கப்பட்டது, காங்கிரசில் உள்ள சீனியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பதவியை அழகிரி, திருநாவுக்கரசர், தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், கோப்பண்ணா உள்ளிட்டோர் எதிர்பார்த்து இருந்தனராம். ஆனால் சீனியர்களான தங்களை விடுத்து, ஜூனியருக்கு வாய்ப்பு வழங்கியிருப்பது அவர்களை அப்செட் செய்திருக்கிறது என்கின்றனர்.


