News April 28, 2025
மே.வங்க அரசியலில் பேசுபொருளாகும் மதம்

மம்தா பானர்ஜி ஒரு இந்து விரோதி என பாஜக தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுப்பதற்காக, மம்தா தனது இந்து அடையாளத்தை சமீபகாலமாக வெளிப்படுத்திவருகிறார்.தான் ஒரு பெருமைமிகு இந்து என்று சட்டசபையிலே அறிவித்தார். தன்னுடைய பிராமண அடையாளத்தையும் பறைசாற்றிக்கொண்டார். இதனால், சுதந்திர இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் மேற்கு வங்க அரசியல் களத்தில் மதம் பேசுபொருளாகி உள்ளது.
Similar News
News December 2, 2025
உலகின் நீளமான நதிகள் தெரியுமா?

நதிகள், மலைப்பகுதிகளில் தொடங்கி சமவெளிகளில் ஓடி கடலில் கலக்கின்றன. நதிகள் செல்லும் வழியெல்லாம், அந்த பகுதியை செழிப்படைய செய்கின்றன. குடிநீர், விவசாயம், பாசனம் மற்றும் மின்சாரம் தயாரித்தல் போன்ற பல்வேறு தேவைகளுக்கு பயன்படுகின்றன. உலகின் சில நதிகள் நீண்ட தூரம் ஓடுகின்றன. அவை எந்தெந்த நதிகள் என்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 2, 2025
ஐபிஎல் ஏலம்: 1,355 வீரர்கள் பதிவு

2026 ஐபிஎல் சீசனுக்காக நடைபெறவுள்ள மினி ஏலத்தில் 1,355 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித், ரவி பிஷ்னோய், ஜேமி ஸ்மித், வெங்கடேஷ் ஐயர், மதீஷா பதிரானா, கூப்பர் கானோலி உள்ளிட்டோர் தங்களது அடிப்படை ஏலத் தொகையாக ₹2 கோடி நிர்ணயம் செய்துள்ளனர். விரைவில் இறுதிப்பட்டியல் வெளியாகும் நிலையில், அபுதாபியில் டிச.15-ம் தேதி மினி ஏலம் நடைபெறவுள்ளது. இதில் CSK எந்த வீரரை வாங்கணும்?
News December 2, 2025
பினராயி விஜயனுக்கு சம்மன் அனுப்பிய ED

மசாலா கடன் பத்திர வழக்கில் கேரள CM பினராயி விஜயனுக்கு ED சம்மன் அனுப்பியுள்ளது. உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 2019-ல் கேரள அரசு பங்குச் சந்தைகளில் கடன் பத்திரங்களை வெளியிட்டு ₹2,672 கோடி நிதி திரட்டியது. அதில் ₹466.91 கோடி முறைகேடாக நிலம் வாங்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. தேர்தல் வரவுள்ள நிலையில், ED நோட்டீஸ் அனுப்பியது BJP-ன் சூழ்ச்சி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாடியுள்ளது.


