News April 27, 2024

தமிழகத்திற்கு ₹276 கோடி நிவாரணம்

image

மிக்ஜாம் புயல் & மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ₹276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ₹115.49 கோடியும், டிச., மழை, வெள்ள பாதிப்புக்காக ₹160.61 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ₹276 கோடி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு, கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ₹3454 கோடியை வாரி வழங்கியுள்ளது.

Similar News

News April 9, 2026

வாக்காளர்களை கடைசி நேரத்தில் அலர்ட் செய்த விஜய்

image

அனைவரும் வாக்களிக்க வேண்டும் என புதுச்சேரி வாக்காளர்களுக்கு விஜய் அழைப்பு விடுத்துள்ளார். இன்னும் சில மணிநேரங்களே உள்ள இத்தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவுறப்போகும் கடைசி மணித்துளி வரை விழிப்புடன் இருந்து உங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என விஜய் தனது X பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News April 9, 2026

AK64 ஷூட்டிங்.. நாள் குறித்த அஜித்

image

இப்ப வருமோ எப்ப வருமோ என AK64 ஷூட்டிங் அப்டேட்டை எதிர்பார்த்திருந்த அஜித் ரசிகர்களுக்கு நற்செய்தி வந்துள்ளது. மே முதல் வாரத்தில் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாகவும், கார் பந்தயங்களுக்கு இடையே ஷூட்டிங்கில் அஜித் பங்கேற்பார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தயாரிப்பாளர் கிடைக்காததால், புரோடெக்‌ஷன் நிறுவனத்துடன் இணைந்து தானே AK64 படத்தின் தயாரிப்பாளராக மாற அஜித் திட்டமிட்டுள்ளாராம்.

News April 9, 2026

காங்., சொல்லித்தான் விஜய்யை சந்தித்தேன்: பிரவீன்

image

பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யை சந்தித்ததற்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென காங்., கூறிவந்தது. இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக தான் செய்த அனைத்தையுமே தலைமையின் ஒப்புதலை பெற்றே செய்ததாக பிரவீன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கட்சியின் நலனுக்காக தான் பலிகடாவாக மாற தயாராக இருந்ததாகவும், விஜய்யை சந்திக்கும்போது தன்னுடன் இன்னொரு அகில இந்திய தலைவர் இருந்ததாகவும் பேசியுள்ளார்.

error: Content is protected !!