News October 25, 2025
பயிர் பாதிப்புக்கு ஏற்ப நிவாரணம்: அமைச்சர்

அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்களில், 33% மேல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் MRK பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் பயிர் சேதம் குறித்து கணக்கீடு செய்தபின், பாதிப்பு சதவிகிதத்திற்கு ஏற்ப நிவாரணம் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். திமுக அரசு மீது குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் EPS பொய்யான குற்றச்சாட்டுகளை வைப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
Similar News
News January 15, 2026
நாமக்கல்லில் முட்டை விலை ரூ.5.60 ஆக நிர்ணயம்

நாமக்கல்லில் நேற்று (ஜன. 14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.60 என நிர்ணயிக்கப்பட்டது. குளிர்காலம் முடிந்து நுகர்வு சற்று குறைந்துள்ளதால் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முட்டை விலையில் மாற்றமின்றி இதே நிலை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
News January 15, 2026
திண்டுக்கல் : மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (ஜன.14) தேவையற்ற மின்னஞ்சல்கள் மற்றும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம்… என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.