News August 25, 2024

ஒரே வாரத்தில் ரிலையன்ஸ் மதிப்பு ₹29,634 கோடி உயர்வு

image

இந்திய பங்குச்சந்தையில் கடந்த வாரம் டாப் 10 நிறுவனங்களில் 9 நிறுவனங்களின் மதிப்பு ₹95,522 கோடி அதிகரித்தது. அதிகபட்சமாக ரிலையன்ஸ் மதிப்பு ₹29,634 கோடி அதிகரித்து, ₹20,29,710 கோடியாக உயர்ந்தது. அதேபோல, TCS ₹17,167 கோடியும், ஹிந்துஸ்தான் யூனிலிவர் ₹15,225 கோடியும், ஏர்டெல் ₹12,268 கோடியும், ஐசிஐசிஐ வங்கி ₹11,524 கோடியும் மதிப்பு உயர்ந்தது. இந்த வார சந்தை எப்படி இருக்குமென கணிக்கிறீர்கள்?

Similar News

News November 24, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 529 ▶குறள்: தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக் காரணம் இன்றி வரும். ▶பொருள்: உறவினராக இருந்து ஏதோ ஒரு காரணம் கூறிப் பிரிந்து சென்றவர்கள், அந்தக் காரணம் பொருந்தாது என்று உணரும்போது மீண்டும் உறவு கொள்ள வருவார்கள்.

News November 24, 2025

சிந்து இந்தியாவுடன் இணையலாம்: ராஜ்நாத் சிங்

image

குறிப்பிட்ட சமூகத்தின் வாக்கை பெறுவதற்காக, அவர்களை திருப்திபடுத்தும் அரசு (காங்.,), சிந்துவில் இருந்து வந்த அந்நாட்டு (பாக்.,) சிறுபான்மையினரை (இந்துக்கள்) அவமானப்படுத்தியதாக ராஜ்நாத் சிங் குற்றஞ்சாட்டினார். இன்று சிந்து நிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இல்லாமல் இருக்கலாம் என்ற அவர், சிந்து மீண்டும் இந்தியாவுக்கு திரும்பலாம் என்றும் கூறினார்.

News November 24, 2025

துபாய் ஏர் ஷோ.. அமெரிக்க கேப்டன் அதிருப்தி

image

தேஜஸ் விமான விபத்தில் நமன்ஷ் சியாலுக்கு உயிரிழந்த பிறகும் துபாய் ஏர் ஷோ தொடர்ந்தது குறித்து அமெரிக்க F-16 குழுவின் கேப்டன் டெய்லர் ஹிஸ்டர் அதிருப்தி தெரிவித்துள்ளார். நமன்ஷுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, தங்களது குழு இறுதி சாகசத்தை நிகழ்த்தாமல் வெளியேறியதாக அவர் பேசியுள்ளார். விபத்தை தொடர்ந்து, ஏர் ஷோ தொடரப்பட்டு அடுத்தடுத்த சாகசங்களை மக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்ததாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!