News November 18, 2024

வெளியானது Nayanthara: Beyond the Fairy Tale

image

கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் Nayanthara: Beyond the Fairy Tale வெப் சீரிஸ் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது. இன்று நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்த வெப் சீரிஸ் வெளியாகி இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு, தனுஷிற்கு எதிராக நயன்தாரா வெளியிட்ட அறிக்கை, பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. இன்று காலை, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படத்தின் டீசரும் 10:15 மணிக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 4, 2026

TN-ல் சாதிவெறி, கலவர அரசியல்.. இயக்குநர் ஆதங்கம்

image

திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தங்களது அதிகார வெறிக்காக வளர்த்தெடுத்த சாதிவெறியே நாங்குநேரி சம்பவத்திற்கு காரணம் என லெனின் பாரதி விமர்சித்துள்ளார். X பதிவில் அவர், திருப்பரங்குன்றத்தில் இல்லாத தீபத்தூணை வைத்து கலவர அரசியலை RSS செய்கிறது என்றும், வெற்று திரைக்கவர்ச்சி அரசியல் மட்டுமே தவெகவிடம் உள்ளதாகவும் கூறியுள்ளார். TN இன்னும் என்னவெல்லாம் பார்க்கபோகிறதோ எனவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

News March 4, 2026

வள்ளலார் பொன்மொழிகள்

image

*பசிபோக்குவதே ஜீவகாருண்யம் *வாக்கு வேறு, மனம் வேறு, செய்கை வேறு என்ற நிலையில் இறைவனை வழிபடாதீர்கள். மூன்றும் ஒன்றிய நிலையில் வழிபடுங்கள் *பல்லாயிரம் சொற்களை உபசாரமாகப் பேசுவதைவிட, முகமலர்ச்சியுடன் ஒருவரைப் பார்த்தாலே நம்மைச் சந்திப்பவர் மகிழ்வார் *நல்லோர் மனதை நடுங்கச் செய்யக் கூடாது. தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தக் கூடாது. நட்புக்கு வஞ்சகம் செய்யக் கூடாது.

News March 4, 2026

பிறந்த ஊரிலேயே புதைக்கப்படும் கமேனி?

image

போரில் கொல்லப்பட்ட கமேனியின் இறுதிச்சடங்கு ஈரானில் உள்ள மஷாத் நகரில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அங்குள்ள இமாம் ரேசா புனித தளத்தில் கமேனியின் உடல் புதைக்கப்படவுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் கூறுகின்றன. அதேஇடத்தில் தான் கமேனியின் தந்தை கல்லறையும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. கமேனியின் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளை ஈரான் அரசு செய்து வருகிறது.

error: Content is protected !!