News March 29, 2024
ஏப்.6ல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு, பிரசாரம் உள்ளிட்ட பணிகளில் காங்கிரஸ் கட்சி மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஏப்.6ஆம் தேதி வெளியிடப்படும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. மேலும், ஜெய்ப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா, ராகுல் ஆகியோர் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News December 1, 2025
தவெக வலையில் சிக்கும் அதிமுக சீனியர்கள்?

செங்கோட்டையனை வைத்தே இன்னும் சில அதிமுக சீனியர்களுக்கு தவெக வலைவீசி இருப்பதாக கூறப்படுகிறது. இதில், பொள்ளாச்சி ஜெயராமன், வைத்திலிங்கம்(OPS தரப்பு), வெல்லமண்டி நடராஜன்(OPS தரப்பு) தற்போது சிக்கியிருக்கிறார்களாம். இவர்களுடன் தொடர் பேச்சுவார்த்தையில் தவெக ஈடுபட்டுவருவதாக பேசப்படுகிறது. இவர்கள் தவெகவுக்கு சென்றால் அதிமுக ஒருங்கிணைப்புக்கு மேலும் பின்னடைவு வரும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News December 1, 2025
சற்றுமுன்: விலை கிடுகிடுவென உயர்வு

டிட்வா புயல் காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. மழையால் விளைச்சல் பாதிப்பு காரணமாக ஒரு கிலோ கத்தரிக்காய் ₹140, தக்காளி ₹80, வெங்காயம் ₹75, வெண்டைக்காய் ₹80, ஊட்டி கேரட் ₹60 என விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகை வரை இந்த விலை உயர்வு நீடிக்கும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.
News December 1, 2025
பாக்., ட்ரோன் தாக்குதல் அதிகரிப்பு: BSF

ஆபரேஷன் சிந்துாருக்கு பிறகு, பாக்.,-ல் இருந்து ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள் வீசும் போக்கு அதிகரித்துள்ளதாக BSF தெரிவித்துள்ளது. 2025-ல் எல்லையை கடந்து வந்த ட்ரோன்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பல்வேறு ரக துப்பாக்கிகள், 3,625 தோட்டாக்கள், 10 கிலோ வெடிபொருட்கள், 12 கையெறி குண்டுகளை கைப்பற்றியுள்ளதாக BSF தெரிவித்துள்ளது. 272 பாகிஸ்தான் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.


