News October 2, 2025
மீண்டும் அதிமுகவில் இணைந்தார்

ஓபிஎஸ் அணியை சேர்ந்த புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் கலைச்செல்வம் (2016 ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர்) இபிஎஸ் முன்னிலையில் மீண்டும் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அதேபோல், OPS அணியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட அவை தலைவர் ராமையா, மாவட்ட இணை செயலாளர் பரிமளா உள்ளிட்டோரும், திமுக, காங்., அமமுகவை சேர்ந்த பலரும் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
Similar News
News October 2, 2025
எந்த உணவில், என்ன சத்து?

◆வைட்டமின் A- கேரட், கல்லீரல் ◆B1- தானியங்கள், பருப்புகள் ◆B2- பால், முட்டை ◆B3- சிக்கன், வேர்க்கடலை ◆B5- அவகாடோ, முட்டை ◆B6- வாழைப்பழம், சால்மன், உருளை ◆B7- முட்டை, பாதாம் ◆B9- பச்சை காய்கறிகள், பயறு, சிட்ரஸ் ◆B12- மீன், இறைச்சி, பால் பொருள்கள் ◆வைட்டமின் D- மீன், பால். ◆வைட்டமின் K- காலே, ப்ரக்கோலி, சோயாபீன்ஸ் ◆வைட்டமின் E- சூரியகாந்தி விதைகள், பாதாம் ◆வைட்டமின் C- ஆரஞ்சு, கொய்யா. SHARE.
News October 2, 2025
DMK ஆட்சியில் 217 குழந்தைகள் படுகொலை: அன்புமணி

திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61% அதிகரித்துள்ளதாக அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். திமுக ஆட்சியில் மட்டும் 217 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 7 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை குழந்தைகள் பாதுகாப்பாக வாழ்வதற்கு தகுதியற்ற மாநிலமாக மாற்றியது தான் திமுக அரசின் சாதனை எனவும் விமர்சித்துள்ளார்.
News October 2, 2025
தமிழகம் முழுவதும் இன்று மூடல்..

டாஸ்மாக் கடைகள் வழக்கமாக நண்பகல் 12 மணிக்கு திறக்கப்படும். ஆனால், இன்று காந்தி ஜெயந்தி என்பதால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி, சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டால், கடுமையான நடவடிக்கை பாயும். பார் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.