News May 2, 2024

2ஜி வழக்கில் மத்திய அரசின் மனு நிராகரிப்பு

image

2ஜி அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மத்திய அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 2012இல் வெளியான 2ஜி தீர்ப்பிற்கு மாற்றாக, அலைக்கற்றையை ஏலத்துக்கு பதிலாக நிர்வாக உத்தரவு மூலம் ஒதுக்க அனுமதிக்க வேண்டுமென மத்திய அரசு மனுவில் கோரியிருந்தது. இத்தனை ஆண்டுகள் கழித்து, எந்தக் காரணமும் இன்றி இந்த மனுவை ஏற்க வேண்டிய தேவையில்லை என உச்ச நீதிமன்றப் பதிவாளர் மனுவை நிராகரித்தார்.

Similar News

News September 21, 2025

வேறு உலகிற்கான நுழைவாயில் உண்மையா?

image

உலகம் முழுவதும் சில இடங்களில் வேறு உலகிற்கு செல்லும் இரகசிய நுழைவாயில்கள் உள்ளதாக நம்பப்படுகிறது. அந்த இடங்கள் குறித்து பல நூற்றாண்டுகளாக பல்வேறு கட்டுக்கதைகள் நிலவுகின்றன. அவை எந்த இடங்கள் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதுகுறித்து உங்க கருத்து என்ன? கமெண்ட்ல சொல்லுங்க.

News September 21, 2025

Baby Bump-உடன் கத்ரீனா❤️❤️! PHOTO

image

பாலிவுட் ஸ்டார் தம்பதிகள் விக்கி கௌஷல் & கத்ரீனா கைஃப் விரைவில் பெற்றோராக உள்ளனர். இத்தகவல் முன்னரே வெளியாகிவிட்ட சூழலில். தற்போது கத்ரீனா ‘Baby Bump’-உடன் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இத்தம்பதிகளுக்கு வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருவருக்கும் கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

News September 21, 2025

விஜய் பேச்சு அனைத்தும் பொய்: ஆளூர் ஷாநவாஸ்

image

நாகை பரப்புரையின்போது விஜய் பேசியது அனைத்தும் பொய் என்று விசிக MLA ஆளூர் ஷாநவாஸ் விமர்சித்துள்ளார். பத்திரிகையாளர்களை சந்திக்க துணிச்சல் இல்லாத விஜய், அண்ணாமலை, ஆர்.என்.ரவியை போன்று அவதூறு அரசியல் செய்வதாக சாடினார். மேலும், அவதூறான இட்டுக்கட்டிய பொய்களையும், வாய்க்கு வந்ததையும் பேசுவதை நிறுத்திவிட்டு, தவெக கொள்கையை முதலில் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!