News August 3, 2024

கொலை வழக்கு பதிவு செய்க: முத்தரசன்

image

இலங்கை கடற்படையின் கப்பல் மோதி, தமிழக மீனவர் உயிரிழந்த விவகாரத்தை கொலை வழக்காக பதிவு செய்ய முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். 4 பேர் சிறிய படகில் சென்று ஒரு கப்பற்படையிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக கூறுவது அபத்தம் எனவும், இலங்கை தமிழ் மீனவர்களை, தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எதிராக முன்னிறுத்துவது இலங்கையின் சூழ்ச்சி எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு முழுமையான தீர்வு காண வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News August 19, 2025

ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது

image

கடந்த ஒரு வாரத்திற்கு மேல் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹320 குறைந்து ₹73,880-க்கும், கிராமுக்கு ₹40 குறைந்து ₹9,235-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ₹1 குறைந்து ₹126-க்கும், கிலோ வெள்ளி ₹1000 குறைந்து ₹1,26,000-க்கும் விற்பனையாகிறது.

News August 19, 2025

ஆசிய கோப்பை: இந்திய அணி இன்று அறிவிப்பு

image

2025 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது. சுப்மன் கில் அணியில் இடம்பெற வேண்டும் என்பதற்காக ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என கூறப்படுகிறது. டி20 ஃபார்மெட்டில் வரும் செப்டம்பர் 9-ம் தேதி துபாய் மற்றும் அபுதாபியில் இந்த போட்டிகள் தொடங்குகின்றன. இந்தியா vs பாகிஸ்தான் மோதும் போட்டிகள் செப்டம்பர் 14ம் தேதி நடைபெறுகிறது.

News August 19, 2025

BREAKING: கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார் அன்புமணி

image

அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து முடிவெடுக்க, ராமதாஸ் தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கை குழு தைலாபுரம் தோட்டத்தில் சற்றுநேரத்தில் கூடுகிறது. பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அன்புமணிக்கு, ராமதாஸ் அமைத்த ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது. 24 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டும் அவரது தரப்பில் எந்த பதிலும் இதுவரை அளிக்கப்படவில்லை. இதனால், அவர் மீது நடவடிக்கை பாய உள்ளது.

error: Content is protected !!