News August 24, 2024
தங்கத்தின் Duty Drawback Rate குறைப்பு

இறக்குமதி செய்து பின் ஏற்றுமதியாகும் தங்கம், வெள்ளி மீதான வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 9%ஆக குறைக்கப்பட்டது. ஆனால், Duty Drawback விகிதம் அதற்கு ஏற்றபடி சரிசெய்யப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், தங்கத்தின் Duty Drawback Rate கிராமுக்கு ₹704லிருந்து ₹335ஆகவும், வெள்ளி கிலோவுக்கு ₹8,949லிருந்து ₹4,468ஆக குறைக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 27, 2026
நகைக் கடன் தள்ளுபடி.. வந்தாச்சு UPDATE

அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் நகைக் கடன் தள்ளுபடி வாக்குறுதியை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், விரைவில் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாக உள்ளது. இதில், முந்தைய தேர்தலைப் போன்று இம்முறையும் நகைக் கடன் தள்ளுபடி வாக்குறுதி இடம்பெறும் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கடந்த முறையை போன்று 5 சவரன் வரை தள்ளுபடி அறிவிப்பு வெளியாகுமா என்பது கேள்விக்குறிதான்.
News March 27, 2026
மாநில அரசியலில் கால்பதிப்பாரா கனிமொழி?

வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் திமுக மும்முரமாக உள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி MP-யான கனிமொழியை வரும் தேர்தலில் போட்டியிட வைக்க வேண்டும் என நெல்லை – தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம் திமுக தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளது. மகளிர் உரிமைகள், பெண்களின் நலனுக்கான சிறந்த அரசியல் தலைவராக அவர் விளங்குவதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.<<-se>>#TNElection2026<<>>
News March 27, 2026
குழந்தைகளுக்கு தேன் கொடுக்காதீங்க.. ஆபத்து!

1 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தேன் அல்லது தேன் கலந்த உணவுகளை கொடுக்க வேண்டாம் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். அந்த வயதில் குழந்தைகளின் செரிமான அமைப்பு முழு வளர்ச்சியடையாததால், தேனை அவர்களால் எளிதில் ஜீரணிக்க முடியாது. மேலும், Clostridium என்ற பாக்டீரியா அதில் இருப்பதால் மலச்சிக்கல் தொடங்கி தசை பலவீனம் எனப் பல பிரச்னைகள் ஏற்படலாம். SHARE.


